முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டு இளையான்குடியில் ஹெச்.ராஜா தலைமையிலான பாஜகவினரின் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருதரப்பினர் தாக்குதல் நடத்தியதால் அங்கு அடிதடி ஏற்பட்டு பரபரப்பு ஆனதாக கூறப்படுகிறது. அதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டு இளையான்குடியில் வேலுர் சையது இப்ராஹிம் என்பவரின் காரை அங்கிருந்த ஒரு தரப்பு சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

வேலுர் சையது இப்ராஹிம் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதால் அவர் அங்கு டீ குடித்து கொண்டிருக்கும் போது அவரது கார் அடித்து சேதப்படுத்தப்பட்டது. இவ்வாறாக பாஜகவை சேர்ந்தவர்களுக்கும் இளையான்குடிக்கும் பிரச்சனைகள் குறித்த வரலாறுகள் பல உள்ளது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இன்று காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு காரில் சென்றுக்கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: #GetOutStalin 10 லட்சம் ஹேஷ்டாக்… ஒரே வார்த்தையில் முடித்துவிட்ட ஹெச்.ராஜா..!

அப்போது அவர் இளையான்குடிக்குள் செல்ல முயன்ற போது அவர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரை தடுத்து நிறுத்திய காவல்துறை, நகருக்குள் செல்ல அனுமதிக்க முடியாது. புறவழிச்சாலை வழியாக செல்லுமாறு தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாஜகவினர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஹெச்.ராஜா பேசுகையில், இளையான்குடி என்ன பாகிஸ்தானில் இருக்கிறதா? காவல் துறை இந்துகளுக்கு எதிராக செயல்படுகிறது.

எதற்காக எனக்கு தடை விதிக்கிறீர்கள். இந்த பகுதியில் செல்ல கூடாது என்று தடை ஏதும் உள்ளதா? காவல் துறை எதற்கு இருக்கிறீர்கள். கோயில்களில் இந்துகள் தொடர்ந்து மரணமடைந்து வருகின்றனர். அதை தடுக்க முடியவில்லை. செல்ல அனுமதிக்காவிட்டால் தர்ணாவில் ஈடுபடுவோம் என்று ஆவேசமாக பேசினார். இதையடுத்து அவரை நகர் வழியாக செல்ல போலீஸார் அனுமதித்தனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஸ்டாலின், உதயநிதியின் தூக்கத்தை கெடுக்கும் பாஜக..! கேப் விடாமல் அடித்து ஆடும் அரசியல்..!