பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உள்ளது என சமீபத்தில் உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதன் அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பல்கலைக் கழக துணை வேந்தர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், முதலமைச்சருக்கு போட்டியாக இந்த மாநாட்டை ஆளுநர் ரவி நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படிங்க: ஜனாதிபதி பெயரளவு தலைவர் தான்..! ஜெகதீப் தன்கருக்கு கபில் சிபல் கண்டனம்..!

அது மட்டுமல்லாது உச்சநீதிமன்றத்தை கடுமையாக துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சித்த நிலையில், அவரே தற்போது இந்த மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக தமிழக அரசுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ரவி துணை குடியரசு தலைவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்பட்ட நிலையில் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த மாநாடு பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், ஆளுநர் நடத்தும் மாநாடு மூன்றாண்டு காலமாக நடைபெற்று வருவதாகவும், துணைவேந்தர்களை நியமிக்கும் பொறுப்பு முதலமைச்சருக்கு இருந்தாலும்...மாநாடு நடத்தும் அதிகாரம் ஆளுநருக்கு இருப்பதாகவும் ராஜ் பவன் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

இந்த நிலையில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆளுநரின் தலைமையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பார் என்று ராஜ்பவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசப் பொருளாக மாறி இருக்கிறது.
இதையும் படிங்க: பல்கலை. வேந்தர் ஆளுநர்.. துணைவேந்தர்களை நியமிக்க முடியாதா.? பாலகுருசாமி காட்டம்!