2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம் மற்றும் மிட்சல் மார்ஷ் களமிறங்கினர். மார்க்ரம் 33 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நிக்கோலஸ் பூரன் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பின் ரிஷப் பண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அப்துல் சமத் களமிறக்கப்பட்டார். இன்னொரு பக்கம் மிட்சல் மார்ஷ் நிதானமாக ரன்கள் சேர்க்க, முகேஷ் குமார் வீசிய 14வது ஓவரில் அப்துல் சமத் 2 ரன்களிலும், மிட்சல் மார்ஷ் 45 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் டேவிட் மில்லர் - பதோனி கூட்டணி களத்தில் இருந்தது.
இதையும் படிங்க: சிஎஸ்கே கம்பேக் கொடுக்கும்.. 2010இல் நடந்த மாயாஜாலம் திரும்பவும் நடக்கும்.. விடாமுயற்சியில் சிஎஸ்கே சிஇஓ!!

கடைசி ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த பதோனி, 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் கடைசி 2 பந்து மீதமிருக்கும் போது லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். ஆனால் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரிஷப் பண்ட் கடைசி நேரத்தில் வந்ததால், அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா சோகம் அடைந்தார்.
இதையும் படிங்க: டாஸ் வென்ற DC அணி பவுலிங்... பதிலடி கொடுக்குமா LSG அணி!!