நாடாளுமன்றத்துக்கு மேலாக எந்தவொரு அதிகாரமும் அரசியலமைப்பில் காட்சிப்படுத்தப்படவில்லை என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் 'கர்த்தவ்யம்' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பங்கேற்று பேசினார். "அரசியலமைப்பு பதவிகள் அலங்கார பதவிகள் என்று சிலர் சமீபத்தில் கூறியது நினைத்துப் பார்க்க முடியாத ஆச்சரியமாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை, ஒரு குடிமகன் மிக உயர்ந்தவர். ஏனென்றால் எந்த ஒரு நாடும் ஜனநாயகமும் குடிமக்களால்தான் கட்டமைக்கப்படுகின்றன. ஜனநாயகத்தின் ஆன்மா ஒவ்வொரு குடிமகனுக்குள்ளும் இடம் பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு மேலாக எந்தவொரு அதிகாரமும் அரசியலமைப்பில் காட்சிப்படுத்தப்படவில்லை. நாடாளுமன்றம்தான் உச்ச நிலை. நாட்டின் ஒவ்வொரு தனி மனிதனைப் போலவே இதுவும் உயர்ந்தது. மக்களைவிட யாரும் உயர்ந்தவர்கள் அல்ல. மக்களாகிய நாம், அரசியலமைப்பின் கீழ், நமது விருப்பத்தை மக்கள் பிரதிநிதிகள் மூலம் பிரதிபலிக்க தேர்வு செய்துள்ளோம். 'நெருக்கடி நிலையை' அமல்படுத்திய பிரதமர் 1977இல் அதற்கு பொறுப்பாக்கப்பட்டார். எனவே, இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஏனெனில் அரசியலமைப்பு மக்களுக்கானதாகும்.

நீங்கள் கட்சி சார்புடைய நலன்களுக்கு கட்டுப்பட முடியாது. நீங்கள் தேசிய நலன்களை மட்டுமே நம்ப வேண்டும். சுதந்திரம் பொறுப்பை கோருகிறது என்பதை டாக்டர் அம்பேத்கர் அங்கீகரித்தார். அதனால்தான் நமது அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள் இரண்டும் உள்ளன. இந்த நாடு நம்முடையது என்பதால், நாம் எப்போதும் நமது உரிமைகளை விட நமது கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என ஜகதீப் தன்கர் தெரிவித்தார்
இதையும் படிங்க: உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி..! துணை ஜனாதிபதியுடன் ஆளுநர் ரவி சந்திப்பு..!
இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்தையே அச்சுறுத்துவதா..? திமுக கூட்டணி கட்சிகளிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட குடியரசுத் துணைத் தலைவர்.!