இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10-ம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. இதில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மட்டும் 4-திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 20-ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகிய சச்சின் திரைப்படம் கடந்த 18-ம் தேதி திரையரங்குகளில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 20-ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத வரவேற்பு இப்போது சச்சின் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: வக்பு சட்ட விவகாரம்: உச்சநீதிமன்றம் தடை விதிக்க நாங்க தான் காரணம்.. விஜய் விளக்கம்!!

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நியூ கிளியோபட்ரா, ஸ்ரீ பாலகிருஸ்ணா ஆகிய திரையரங்குகளில் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி,நடிகர் விஜய்-யின் சச்சின் திரைப்படங்கள் இரண்டு ஸ்கிரீன்களில் 4-காட்சிகள் வரை ஓடிகொண்டு இருக்கும் நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு தல,தளபதி படங்கள் ஒரே நேரத்தில் ஒரே திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பதை முன்னிட்டு தல ரசிகர்கள் மற்றும் தளபதி ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு கட் அவுட் வைத்து கொண்டாடினார். இந்நிலையில் விபத்து ஏற்படுத்தும் விதமாக திரையரங்கு வெளியில் வைக்கப்பட்டுள்ள அஜித் ரசிகர்கள் கட் அவுட்டை எடுக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் அஜித் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். அதனால் விபத்து ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அஜித் ரசிகர்கள் கட்டவுட் அகற்றி உள்ளனர்.

ஆனால் விஜய் ரசிகர்கள் வைத்த கட்டவுட் அகற்றாமல் திரையரங்கு முன்பே வைக்கப்பட்டுள்ளதால் கடுப்பான அஜித் ரசிகர்கள், நியூ கிளியோபட்ரா திரையரங்கம் முன்பு திரண்டனர் அப்போது நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக வசூல் சாதனை படைத்து கொண்டிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் நாங்கள் கொண்டாடி வரும். நிலையில் அஜித் கட்டவுட் மட்டும் காவல்துறை அகற்ற உத்தரவிட்டு விட்டு விஜய் கட்டவுட் கடந்த மூன்று தினங்களாக திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டுள்ளது இதனால் தூத்துக்குடி தென்பாக காவல்துறையினர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக அஜித் ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.
தல தளபதி ரசிகர்கள் மத்தியில் மோதலை உருவாக்கும் நிலை உள்ளது. ஆகையினால் நடிகர் விஜய் கட்அவுட்டை அகற்ற காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கட்டிடத்துக்கு வெள்ளை அடிப்பவன் அல்ல; கட்டிடத்தையே இடித்து கட்டுகிறவன்... சீமான் ஆவேசம்!!