×
 

அதல பாதாளத்தில் சிஎஸ்கே... இதை விட மோசமா விளையாடவே முடியாது; ரசிகர்கள் விமர்சனம்!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரன்கள் அடிக்க முடியாமல் தெணறி வருகிறது.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திராவும் கான்வேவும் களமிறங்கினர். பவர் பிளேவை சிறப்பாக பயன்படுத்தி ரன்களை குவிப்பார்கள் என என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிஎஸ்கே அணி 21 ரன்கள் அடிக்க 5.3 ஓவர்கள் எடுத்துக் கொண்டனர்.

இதில் 2 விக்கெட்டுகளையும் இழந்தனர். கான்வே 12 ரன்களிலும் ரச்சின் ரவீந்திரா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ராகுல் திருப்பாதி, 22 பந்துகளில் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் வீழ்ந்ததால் அணியின் ஸ்கோர் 100-ஐ தாண்டவே தடுமாறியது. விஜய் சங்கர் 29 ரன்களிலும் ராகுல் திரிப்பாதி 16 ரன்களிலும் அஸ்வின் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் நம்பப்பட்ட ஜடேஜா டக் அவுட் ஆனார்.

இதையும் படிங்க: மீண்டும் கேப்டனாக முடிசூடிய தோனி... எத்தனை போட்டிக்கு..? ருத்ராஜின் நிலை என்ன..?

அவரை தொடர்ந்து வந்த ஹூடாவும் டக் அவுட் ஆனார். இதனால் ரசிகர்கள் கவலையடைந்தனர். பின்னர் வந்த தோனி அடித்து அணியை மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் பந்துகளை அடிக்க தடுமாறினார். 4 பந்துகளை சந்தித்த அவர் 1 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். கடைசி 3 ஓவர்களில் 3 விக்கெட் விழுந்ததை அடுத்து அணி நிலை அதல பாதாளத்துக்கு சென்றது.

சிஎஸ்கே அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் பந்துகளை அடித்து ஆடாமல் தடவிக்கொண்டே இருந்தனர். இதனால் 16 ஓவர்கள் முடிந்த நிலையிலும் அணியின் ஸ்கோர் 80-ஐ தாண்டவில்லை. இது ரசிகர்கள் உட்பட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 8 விக்கெட்டுகளையும் இழந்து ரன்களையும் குவிக்காமல் சிஎஸ்கே அணி சொதப்பி வருகிறது. இதனால் விரக்தியடைந்த ரசிகர்கள் இதை விட மொசமாக ஆடவே முடியாது என விமர்சித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: சிஎஸ்கே அணியில் மிகப்பெரிய மாற்றம்... தோனி ரசிகர்கள் உற்சாகம்; சோகத்தில் ருதுராஜ்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share