×
 

கிரிக்கெட் விளையாடுவதை என் மகன் நிறுத்தட்டும்.. கடும் விரக்தியில் சஞ்சு சாம்சனின் தந்தை

சஞ்சு சாம்சனுக்கு எதிராக கேரள கிரிக்கெட் சங்கம் ஏதோ திட்டமிடுகிறது என்று அவருடைய தந்தை விஸ்வநாத் சாம்சன் பகீர் புகார் கூறியிருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்து சஞ்சு சாம்சன் விளையாடி வருகிறார். இந்நிலையில் அவருடைய தந்தை விஸ்வநாத் பல புகார்களைக் கூறி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில்,  "சஞ்சுவுக்கு எதிராக கேரள கிரிக்கெட் சங்கம் ஏதோ திட்டமிடுகிறார்கள். சஞ்சு கேரளாவை விட்டு வெளியேறும் வகையில் கிரிக்கெட் சங்கம் சதித்திட்டம் தீட்டியது. எங்களால் அவர்களுடன் சண்டையிட முடியவில்லை. எங்களால் அவர்களுடன் மோதவும் முடியாது. என் மகன் பாதுகாப்பாக இல்லை.

எல்லாவற்றுக்கும் கிரிக்கெட் சங்கத்தினர் சஞ்சு மீது பழி சுமத்துவார்கள். மக்களும் அதைத்தான் நம்புவார்கள். எனவே என் மகன் கேரளாவுக்காக கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். 'சஞ்சு, எங்களுடன் விளையாட வா' என்று எந்த மாநிலமாவது வாய்ப்பு கொடுத்தால்வல், அதற்கும் தயாராக இருக்கிறேன்.

சஞ்சு ஒரு தனிநபர். கேரள கிரிக்கெட் சங்கம் சக்திவாய்ந்த அமைப்பு. என் மகனுக்கு எதிராக அவர்கள் சதி திட்டங்களை தீட்டுவார்கள் என்று பயப்படுகிறேன்.  கிரிக்கெட், மைதானம், பயிற்சியைத் தவிர சஞ்சு வேறு எதிலும் கவனம் செலுத்தியதில்லை. அவர் தனது வாழ்க்கையில் 30 ஆண்டுகளை கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்துள்ளார்." என்று விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தன் மகனுக்கு வாய்ப்பு அளிக்காமல், எம்.எஸ். தோனி, விராட் கோலி ஆகியோர் சஞ்சுவின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிட்டதாக விஸ்வநாத் புகார் கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார். தற்போது கேரள கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக அவர் புகார் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சொத்தையான சூப்பர் ஸ்டார்ஸ்! ரஞ்சிக் கோப்பையிலும் சொதப்பிய ரோஹித், கில் பந்த், ஜெய்ஸ்வால்

இதையும் படிங்க: அதிரடி அபிஷேக், சக்ரவியூகம் அமைத்த சக்ரவர்த்தி: இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த இந்திய அணி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share