×
 

ருதுராஜை சிஎஸ்கே கேப்டனாக்க இதுதான் காரணம்... மௌனம் கலைத்த தோனி!!

சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜை தேர்வு செய்தது குறித்து தோனி தெரிவித்துள்ளார்.

2025 ஐபிஎல் திருவிழா கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகிறது. நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவரில் 155 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 25 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார். சிஎஸ்கே வீரர் நூர் அகமது 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை சாய்த்து அசத்தினார்.  

156 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான ரச்சின் ரவீந்திரா நின்று விளையாடினார். 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்று சென்னை வெற்றியை உறுதி செய்தார். கடைசி ஓவரை மிட்செல் சாண்ட்னர் வீசிய நிலையில், அதன் முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு சென்னை அணியினை வெற்றி பெற வைத்தார். மறுபுறம் 19ஆவது ஓவரில் தோனி களம் இறங்கினார். முதல் இரண்டு பந்துகள் டாட் வைத்திருந்தார்.

இதையும் படிங்க: ஐபிஎல்லில் ஓய்வா..? வீல் சேரில் இருந்தாலும் சி.எஸ்.கே என்னை விடாது… வாயடைக்க வைத்த தோனி..!

20வது ஓவரில் ரச்சின் அடித்து இலக்கை எட்டினார். இதன்மூலம் சிஎஸ்கே அணி முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த ஆட்டத்திற்கு பின் பேசிய தோனி, சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜை தேர்வு செய்தது குறித்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், ருதுராஜின் தீவிரமான திட்டமிடலே இதற்கு முக்கியம். பல ஆண்டுகளாக சிஎஸ்கே அணியில் இருந்திருக்கிறார்.

அவருடைய மனநிலை எப்போதும் அமைதியாக இருக்கும். அதை நாங்கள் கவனித்தோம்,. அவர் பயிற்சியாளர்கள் குழுவினருடன் நல்ல உடன்பாட்டில் இருந்தார். 2023 ஐபிஎல் தொடர் ஐபிஎல் முடிந்தவுடன், நீ தான் அடுத்த ஆண்டு கேப்டன் என்று கூறிவிட்டேன். தற்போதும் கூட பலர் என்னை நிழல் கேப்டன் என்று கூறினார்கள், ஆனால் உண்மையில் 99% முடிவுகளை அவரே எடுத்தார். நான் அவருக்கு வழிகாட்டினேன், ஆனால் ஒவ்வொரு முக்கியமான முடிவுகளும் அவருடையதுதான். அவர் மிக சிறப்பாக இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார் என்று கூறினார்.

இதையும் படிங்க: பால் டேம்பரிங் செய்ததா சிஎஸ்கே..? மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share