×
 

ஐசிசி கோப்பை இந்தியாவுக்குதான்.. எல்லா ஏற்பாடும் பண்ணிடாங்க.. இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பகிரங்க புகார்!

இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் வகையிலேயே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகின்றன. மற்ற அணிகள் பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானில் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்தியா விளையாடும் போட்டி துபாயில் மட்டும் நடைபெறுவதால் அது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் இந்தியாவுக்கு சாதகமாக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக நாசர் உசேன் கூறுகையில், “ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி மட்டும் வேறு எங்கும் பயணிக்காமல் துபாய் மைதானத்திலேயே ஆடுகிறது. இது அவர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். மற்ற அணிகள் எல்லாம் துபாய்க்கும் பாகிஸ்தானில் உள்ள நகரங்களுக்கும் பயணம் செய்கின்றன. ஆனால், இந்திய அணிக்கு ஒரே ஹோட்டல், ஒரே ஓய்வறை, ஒரே மைதானம் என்பதால் அவர்கள் எளிதாக மைதானத்தின் தன்மையையும் அங்குள்ள சூழ்நிலையையும் புரிந்து கொள்ள முடியும்.

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு மழையால் வந்த துரதிர்ஷ்டம்… ஒரே புள்ளியுடன் வெளியேறி அவமானம்..!

மற்ற அணிகள் மைதானங்களுக்கேற்ப அணிகளை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உண்டு. இந்திய அணி ஒரே மைதானத்துக்கு ஏற்பவே தரமான வீரர்களை அணிக்குள் இணைத்துள்ளது. மற்ற அணிகளுக்கு இவை பாதகம் ஆகும். இந்திய அணிக்கு மட்டும் சாதகம் ஆகும். இதனால், இந்த முறை இந்திய அணியே சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். அதற்கேற்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என்று நாசர் உசேன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: ICC Championship: அய்யோ பரிதாபம்.. இங்கிலாந்தை தொடரிலிருந்து துரத்தியது ஆப்கானிஸ்தான்.. சாதித்த ஆப்கன் வீரர்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share