×
 

இதுக்கு எதுக்கு ஸ்ட்ரேடஜிக் டைம் அவுட்... லக்னோவை பங்கமாக கலாய்த்த ரசிகர்கள்!!

1 ரன் அடிக்க வேண்டும் என்ற நிலையில் லக்னோ அணி ஸ்டேடஜிக் டைம் அவுட் எடுத்துக் கொண்டதை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

2025 ஐபிஎல் சீசனின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. 172 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க வீரராக களமிறங்கிய பிரியண்சு ஆர்யா 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பிரப்சிம்ரன் சிங் அபாரமாக ஆடி 9 பவுண்டிரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடித்து 69 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் நேகல் வாதேரா ஜோடி நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களும் நேகல் வாதேரா 43 ரன்களும் குவித்தனர். 16வது ஓவர் முடிவில் வெற்றி பெற இன்னும் 1 ரன் அடிக்க வேண்டும் என்ற நிலையில் லக்னோ அணி ஸ்டேடஜிக் டைம் அவுட் எடுத்துக் கொண்டது.

இதையும் படிங்க: அபாரமான ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி... லக்னோ அணியை அசால்ட்டாக வீழ்த்தி வெற்றி!!

இதை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 1 ரன் இருக்கும்போது எதற்காக லக்னோ அணி இந்த டைம் அவுட்டை எடுத்தது. ஒரு ரன் இருக்கும் போது அப்படி என்ன யுக்திகளை வகுத்து எதிரணியை வீழ்த்த போகிறது என்று ரசிகர்கள் கிண்டல் அடித்த வருகின்றனர். மேலும் இதனை கொஞ்சம் முன்கூட்டியே எடுத்திருந்தால் பஞ்சாப் அணியின் ரன் குவிப்பு வேகம் தடை பட்டிருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.  

ஆனால் மறுபுறம் இந்த டைம் அவுட் என்பது விளம்பரத்திற்காக உருவாக்கப்பட்ட பிசிசியின் திட்டம் என்றும், இதற்கும் கிரிக்கெட்டிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்ற கருத்தும் உள்ளது. அதிகப்படியான விளம்பரங்களை போட்டு சம்பாதிப்பதற்காக தான் இந்த நேரம் ஒதுக்கப்படுவதாகவும் இதனை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஏமாற்றிய ரிஷப் பண்ட்; டீமை தாங்கிபிடித்த பூரான்... லக்னோ உரிமையாளர் அதிருப்தி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share