×
 

ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த கேப்டனா? இவரை ஏன் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்தார்? இதோ விவரம்!!

ஐபிஎல் தொடரில் நீண்ட காலமாக கேப்டனாக செயல்பட்டு வருபவர்களில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த கேப்டனாக உருவாக ரசிகர்கள் கூறும் காரணம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஐபிஎல் போட்டி கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் அணி, பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கும் வாங்கியுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டானாக்கியுள்ளார் ரிக்கி பாண்டிங். இதனிடையே ஐபிஎல் தொடரில் நீண்ட காலமாக கேப்டனாக செயல்பட்டு வரும் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோரை விட ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த கேப்டனாக உருவாகியுள்ளார்.

அதற்கு காரணம் தோல்விகளின் போது கேப்டனாக முன் நின்று ஸ்ரேயாஸ் ஐயர் பழியை தன் மீது போட்டுக் கொள்வதே காரணம் என ரசிகர்கள் கூறுகின்றனர். ஸ்ரேயாஸ் ஐயர் பெரிய ரன்களை அடிக்கவில்லை என்றாலும், கேகேஆர் அணிக்கு தேவையான நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அவரின் பேட்டிங் வரிசையை நிரந்தரமாக வைத்து கொள்ளாமல், மாற்றி கொண்டே இருந்தார்.  அதன் தொடர்ச்சியே குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சதத்தை பற்றி கவலைப்படாமல் ஷஷாங்க் சிங்கை அதிரடியாக விளையாட வைத்தது.

இதையும் படிங்க: மோசமாகி வரும் CSK பேட்டிங்... அணிக்குள் வரும் 2 இளம் வீரர்கள்... யார் தெரியுமா..?

அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியா ஏ அணியில் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் இருக்கிறது. அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் ஒவ்வொரு வீரரின் திறமையையும் அறிந்து, அதற்கான சூழலில் பயன்படுத்தும் திறமையை வளர்த்து கொண்டவர். ஸ்ட்ரீட் ஸ்மார்ட் என்று சொல்லப்படும் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவதே ஸ்ரேயாஸ் ஐயரின் பலமாக இருக்கிறது. அதன் மூலமாகவே கேகேஆர் அணியை ஸ்ரேயாஸ் ஐயர் கோப்பையை வெல்லும் அணியாக மாற்றி காட்டி இருக்கிறார்.

ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஆகியோரை விடவும் தோல்விக்கான காரணத்தை எளிதாக புரிந்து அதற்கான செயல் திட்டங்களையும் பயிற்சியாளர்களுடன் உருவாக்குபவர். இதனை டெல்லி அணியில் இருந்த போதே ஸ்ரேயாஸ் ஐயர் செய்திருப்பதால் தான், இம்முறை பஞ்சாப் அணிக்கு வந்த பின்னரும் ரிக்கி பாண்டிங் அவரை விடாப்பிடியாக வாங்கியுள்ளார். இதனால் 11 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதோடு, கோப்பையை வெல்லவும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இன்றைய ஐபிஎல் போட்டி இப்படி தான் இருக்கும்.. ரகசியத்தை போட்டுடைத்த SRH பயிற்சியாளர்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share