×
 

நம்பர் ஒன் டெஸ்ட் வீரர்.. 2024இன் சிறந்த வீரர் விருதை தட்டித் தூக்கிய பும்பும் பும்ரா.!

2024ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரராக இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தேர்வு செய்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டு முடிந்தவுன் அந்த ஆண்டில் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் 2024ஆம்  ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரர் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடி இருந்ததால், எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது. இந்நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரராக இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளார்.

31 வயதான பும்ரா, 2024இல் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இந்த 13 போடிகளை தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியாவில் பும்ரா விளையாடி இருந்தார். இதில் ஆஸ்திரேலிய தொடரில் மட்டும் 32 விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றி கவனம் ஈர்த்தார். இதேபோல கடந்த ஆண்டில் 8 டி20 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றி இருந்தார். இதில் டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்றதும் அடக்கம்.
 

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2024ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டார். 2024இல் 13 போட்டிகளில் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்ற  ஸ்மிருதி மந்தனா 747 ரன்கள் குவித்திருந்தார். ஆடவருக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2024-ம் ஆண்டின் சிறந்த வீரராக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் தேர்வானார். கடந்த ஆண்டில் 14 ஆட்டங்களில் விளையாடிய அவர், 417 ரன்களையும், 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

இதையும் படிங்க: கிரிக்கெட் விளையாடுவதை என் மகன் நிறுத்தட்டும்.. கடும் விரக்தியில் சஞ்சு சாம்சனின் தந்தை

இதையும் படிங்க: அதிரடி அபிஷேக், சக்ரவியூகம் அமைத்த சக்ரவர்த்தி: இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த இந்திய அணி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share