×
 

வான்கடே மைதானத்தில் இதைதான் செய்ய வேண்டும்.. மும்பை கேப்டன் ஹர்திக் தகவல்!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி மும்பை அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து ஹௌதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது. டாஸ் வெற்றி பெற்ற பிறகு பேசிய மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, நாங்கள் முதலில் பவுலிங் செய்கிறோம். வான்கடே மைதானத்தில் பனிப்பொழிவை கட்டுப்படுத்த முடியாது. நேற்று பயிற்சியின் போதும் அவ்வளவு பனிப்பொழிவு இருந்தது.

அதனால் வான்கடே மைதானத்தில் 2வது பேட்டிங் செய்வதே சிறந்த முடிவு. மும்பை அணியில் எந்த மாற்றம் இல்லை. இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலும் எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். மும்பை அணியின் பேட்டிங் வரிசை சூழலுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படும். எங்கள் அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் ஆதரவாக இருக்கிறோம். பும்ரா மிகச்சிறந்த ஃபிட்னஸ் உடன் இருக்கிறார்.

இதையும் படிங்க: ஐபிஎல்லில் 4 வருடங்களுக்கு பின் வந்த சூப்பர் ஓவர்... டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி!!

அதனால் பும்ராவை பற்றி கவலை கொள்ள தேவையில்லை. அவர் ஃபிட்னஸ் உடன் இல்லையென்றால்,. இங்கு விளையாட வந்திருக்க மாட்டார் என்று தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய பேட் கம்மின்ஸ், முதல் பேட்டிங் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. வான்கடே சிறந்த பிட்சாக உள்ளது. நங்கள் அணியிலும் எந்த மாற்றமும் இல்லை. அபிஷேக் சர்மா கடந்த போட்டியின் ஹைலைட்ஸை இப்போதும் பார்த்து கொண்டே இருக்கிறார்.

கடந்த போட்டிக்கும் இந்த போட்டிக்கும் இடையில் நல்ல ஓய்வு கிடைத்துள்ளது. 2 சிறந்த பயிற்சி செஷன் அமைந்தது. சில மைதானங்களில் ரிவர்ஸ் ஸ்விங் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன். குறிப்பாக ஐதராபாத் மைதானத்தில் தாக்கத்தை கொடுக்காது. ஐபிஎல் போட்டிகள் அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் போது ஒவ்வொரு அணியுமே பனிப்பொழிவை சமாளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சுமாரான இலக்கை எட்டியுள்ள டெல்லி கேபிடல்ஸ்... வெற்றி பெறுமா ராஜஸ்தான் ராயல்ஸ்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share