வருண் சக்கரவர்த்தியை நினைத்து தூக்கம் தொலைத்த நியூசிலாந்து அணி.. போட்டு உடைத்த பயிற்சியாளர்.!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வருண் சக்ரவர்த்தி அச்சுறுத்தலாக இருப்பார் என நியூஸிலாந்து அணியின் பயிற்சியாளரான கேரி ஸ்டீட் அச்சம் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே துபாயில் நாளை நடைபெற உள்ளன. இந்த இரு அணிகளும் ஐசிசி ஒரு நாள் தொடரில் 25 ஆண்டுகள் கழித்து மோதுகின்றன. இதனால் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இறுதிப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இறுதிப் போட்டி குறித்தும் குரூப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி சுழலில் நியூசிலாந்து தடுமாறியது குறித்தும் அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கருத்து தெரிவித்துள்ளார்.
"குரூப் சுற்றில் எங்களுக்கு எதிராக இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 42 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இறுதிப் போட்டியிலும் எங்களுக்கு எதிராக அவர் களமிறங்குவார் என நினைக்கிறேன். அவர் தரமான பந்து வீச்சாளர், கடந்த போட்டியில் எங்களுக்கு எதிராக தனது திறமைகளை வெளிப்படுத்தினார். விளையாட்டில் நிச்சயம் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார்.
எனவே அவருடைய பந்து வீச்சு திட்டங்களை எப்படி முறியடிப்பது, அவருக்கு எதிராக எப்படி ரன்களை குவிப்பது என்பது குறித்து நாங்கள் சிந்தித்து வருகிறோம். இந்தத் தொடரின் அட்டவணை என்பது எங்கள் கையில் இல்லை. எனவே இதுகுறித்து நாங்கள் கவலைப்படவில்லை. இந்திய அணி அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாடுகிறது. ஆனால், நாங்கள் இங்கு ஒரு போட்டியில்தான் விளையாடினோம். அந்த அனுபவத்திலிருந்து மிக விரைவாக கற்றுக்கொள்வோம்.
இதையும் படிங்க: ICC Championship: அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை சாய்த்தது நியூசிலாந்து... இறுதியில் இந்தியாவுடன் மல்லுக்கட்டும் கிவ்விஸ்கள்.!
அந்த அனுபவத்தை வைத்து விரைவாக கற்றுக்கொள்வோம். தொடரின் தொடக்கத்தில் எட்டு அணிகள் இருந்தன. இப்போது இரண்டாகக் குறைந்துள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தும் நிலையில் நாங்கள் இருந்தால், நான் மகிழ்ச்சியடைவேன். இறுதிப் போட்டியில் விளையாட உடலையும் மனதையும் சரியாக வைத்துக் கொள்ளவேண்டும். அதிலும் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்துவோம்" என்று கேரி ஸ்டீட் கூறினார்.
இதையும் படிங்க: ரோஹித் சர்மாவுக்கு இப்படி ஒரு பெருமை.. உலகில் எந்த கேப்டனும் செய்யாத சாதனை படைத்து அசத்தல்.!