ICC Championship: அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை சாய்த்தது நியூசிலாந்து... இறுதியில் இந்தியாவுடன் மல்லுக்கட்டும் கிவ்விஸ்கள்.!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 50 ரன்களில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது நியூஸிலாந்து. நியூஸிலாந்து அணியில் வில் யங், ரச்சின் ரவீந்திரா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
யங் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். லின்னர் கேன் வில்லியம்சன் உடன் 2-வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ரச்சின். இருவரும் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை சிதறடித்தனர். சிறப்பான ஆட்டத்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது ஐந்தாவது சதத்தை ரச்சின் பதிவு செய்தார். இந்த ஐந்து சதங்களையும் அவர் ஐசிசி ஒருநாள் தொடர்களில் எடுத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. அவர் 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய கேன் வில்லியம்சனும் சதம் பதிவு செய்தார். இந்தப் போட்டியோடு சேர்த்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கடைசியாக விளையாடி மூன்று போட்டிகளில் அவர் சதம் விளாசி உள்ளார். அவர் 102 ரன்களில் ஆட்டமிழந்தார்.டாம் லேதம் ரன் அவுட் ஆனார். மிட்செல் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரேஸ்வெல் 16 ரன்கள், கிளென் பிலிப்ஸ், அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். கேப்டன் சான்ட்னர் 2 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து.
363 ரன்கள் என்கிற பெரிய இலக்கை அரை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. ரியான் ரிக்கல்டன், கேப்டன் பவுமா இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். ரிக்கல்டன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த ராஸி வான்டர் டூசன் உடன் இணைந்து 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் பவுமா. இருவரும் அரை சதம் கடந்த அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அவர்கள் இருவரையும் நியூஸிலாந்து அணியின் கேப்டன் சான்ட்னர் அவுட் செய்தார்.
இதையும் படிங்க: ரோஹித் சர்மாவுக்கு இப்படி ஒரு பெருமை.. உலகில் எந்த கேப்டனும் செய்யாத சாதனை படைத்து அசத்தல்.!
பின்னர் சீரான இடைவெளியில் தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகளை இழந்தது. கிளாஸன் 3, மார்க்ரம் 31, முல்டர் 8, மார்க்கோ யான்சன் 3, கேஷவ் மஹராஜ் 1, ரபாடா 16 ரன்கள் என ஆட்டமிழந்தனர். டேவிட் மில்லர் அதிரடியாக ஆடி சதம் விளாசினார். இறுதியில் 312 ரன்கள் மட்டுமே தென் ஆப்பிரிக்காவால் எடுக்க முடிந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் இந்த வெற்றியின் மூலம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) துபாயில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் விளையாடுகிறது.
இதையும் படிங்க: கிங்னா சும்மாவா...ஒரே போட்டியில் லிஸ்ட் போட்டு சாதனை படைத்த கோலி!!