×
 

சிஎஸ்கே-வை சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியது ஆர்.சி.பி... ரசிகர்களுக்கு ஆறுதலான தோனியின் ஆட்டம்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

2025 ஐபிஎல் தொடரின் 8 ஆவது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து தொடக்க வீரர்களாக ஆர்சிபி அணி தரப்பில் பில் சால்ட் - விராட் கோலி களமிறங்கினர். சிஎஸ்கே அணி தரப்பில் முதல் ஓவரை கலீல் அஹ்மத் வீசினார். ஆர்சிபி அணியின் பில் சால்ட் முதல் சில பந்துகள் பில் சால்ட் தடுமாறினாலும், அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி தள்ளினார். அடுத்தடுத்து பில் சால்ட் அதிரடியாக ரன்களை குவித்ததால், 4 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 37 ரன்களை விளாசியது.

5 ஆவது ஓவரில் நூர் அஹ்மத் வீசிய பந்தில் பவுண்டரி விளாச நினைத்த பில் சால்ட், ஒரு சென்டிமீட்டர்கள் வெளியில் கால்களை கொண்டு வந்த போது, தோனி மின்னல் வேகத்தில் பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்தார். இதை அடுத்து பில் சால்ட் 16 பந்துகளில் ஒரு சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 32 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதை அடுத்து களமிறங்கிய ரஜத் பட்டிதார் - விராட் கோலியுடன் சேர்ந்து ரன்களை குவிக்க தொடங்கினர். இதில் கோலி 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். பட்டிதரும் 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களின் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதையும் படிங்க: கோலியை தலையில் அடித்து கடுப்பாக்கிய பவுலர்... அடுத்து நடந்த டிவிஸ்ட்!!

க்ருணால் பாண்டியா டக் அவுட் ஆனார். இதன்மூலம் ஆர்.சி.பி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. இதை அடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சிஎஸ்கே அணியின் ராகுல் திருப்பாதி 5 ரன்களிலும், ருதுராஜ், தீபக் ஹூடா நான்கு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் சிஎஸ்கே அணி 26 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய ரச்சின் ரவீந்தர் போராடி 31 பந்துகளில் 41 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் களமிறங்கிய ஹூடா, சாம் கரன், சிவம்தூபே, அஷ்வின் ஆகியோர் மிக சொற்ப ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர். 

பின்னர் களமிறங்கிய ஜடேஜா மற்றும் தோனி நிதனமாக ஆடினர். அப்போது ஜோஷ் ஹேசல்வுட் வீசிய பந்தில் ஜடேஜா 25 ரன்களில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து களமிறங்கிய நூர் இறுதி வரை இலக்கை எட்ட முடியாமல் தடுமாறினார். மறுபுறம் தோனி கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்தது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்தது. இருந்தபோதிலும் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஆர்சிபி அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 17 வருடங்களுக்கு பின் சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: பில் சால்ட்-ஐ கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கிய தோனி... ஷாக்கான ஆர்.சி.பி ரசிகர்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share