ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெறுகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன. ஏற்கனவே ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டன. பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதே நேரத்தில் தனது கடைசி லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதன் முடிவுக்கு ஏற்ப குரூப் 'ஏ' பிரிவில் இந்திய அணியின் முதலிடம், இரண்டாமிடம் நிலை தெரியவரும்.
இதன் பின் மார்ச் 4ம் தேதி துபாயில் நடக்கும் முதல் அரையிறுதியில், இந்திய அணி தென் ஆப்ரிக்கா அல்லது ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடும். இதனால் கராச்சியில் இருந்து ஆஸ்திரேலியா அல்லது லாகூரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணிகள் துபாய் செல்ல வேண்டும். பிறகு மார்ச் 5, 6இல் அரையிறுதி போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிக்காக நியூசிலாந்து அணி லாகூர் செல்ல வேண்டும்.
ஒரு வேளை அரையிறுதியில் இந்தியா வெல்லும் பட்சத்தில் இறுதிப் போட்டி துபாயில் மார்ச் 9ல் நடைபெறும். இதனால் லாகூரில் நடக்கும் அரையிறுதியில் வெல்லும் அணி, மீண்டும் இறுதிப் போட்டிக்காக துபாய் வர வேண்டும். ஒருவேளை அரையிறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்தால், லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறும். ஏற்கனவே இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது சாதகமானது முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நாக் அவுட் போட்டிகள் அட்டவணை விமர்சனத்தைக் கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலிதான் கிங்.. புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய ஜாம்பவான்.!