தமிழ் திரையுலகில் சிவாஜி என்றால் எம்ஜிஆர் என இருவேறு ரசிகர்களும், ரஜினி என்றால் கமல் என்று இருவேறு ரசிகர்களும், தற்பொழுது விஜய் என்றால் அஜித் என இருவேறு ரசிகர்களும் இருந்து வருகின்றனர்.

இதேபோல் ஆரம்பத்தில் நடிகைகள் என்றால், விஜய்க்கு திரிஷா, அஜித்துக்கு ஷாலினி என இவர்களது படத்தின் இணைப்பு அதில் உண்டாகும் கெமிஸ்ட்ரி பயங்கரமாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்பரிப்பர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அஜித்தும் ஷாலினியும் திருமணம் செய்து கொண்டனர்.

தனது சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த ஷாலனி, அலைபாயுதே, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அமர்க்களம், பிரியாத வரம் வேண்டும் என இதுவரை 90 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். அதிலும் "உன்னை பார்த்த பின்பு தான் நான் ஆகவில்லையே" என்ற பாடலை கேட்டால்,அஜித் மற்றும் ஹாலினியின் நினைவு தான் வரும். அந்த அளவிற்கு இருவரின் கெமிஸ்ட்ரி அழகாக இருக்கும். ஆனால் தனது திருமணத்திற்கு பின் குடும்ப வாழ்க்கை மீது ஆர்வம் இருந்ததால் நடிப்பில் இருந்து விலகி இருந்தார்.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா தத்தா பகிர்ந்து ஹாட்டான கவர்ச்சி புகைப்படம்..! இணையத்தில் வைரல்..!
ஆனால் ஒவ்வொரு முறையும், அஜித் படப்பிடிப்புக்கு சென்றாலும், பைக்கை எடுத்துக்கொண்டு ட்ராவல் சென்றாலும், தற்போது கார் ரேஸில் விபத்துக்குள்ளாகி விடாமல் முயற்சித்தாலும் அவரின் முழு வெற்றிக்கு பின்னணியாக இருப்பவர் ஷாலினி மட்டுமே. காரணம் இதுவரை குடும்பத்தையும் பிள்ளைகளையும் அஜித்தையும் கவனமாக பார்த்து கொள்பவர் ஹாலினி தான். சமீபத்தில் அஜித் கூட்டணி கார் ரேஸில் ஜெயிக்க அதனை ஷாலினி ரசித்து கொண்டாடியது இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டது.

இந்த சூழலில் தற்பொழுது, மகிழ் சிறுமேனி இயக்கத்தில், அனிருத் இசையில், அஜித், த்ரிஷா, ரெஜினா, ஆரவ், அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் விடா முயற்சி. இப்படம் வெளியாகி தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் அஜித்தின் அடுத்த படமான, ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் மற்றும் திரிஷா இணைந்து நடிக்கும் "குட் பேட் அட்லி" திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளியாக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அஜித்தின் மனைவியான ஷாலினி, 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது அஜித் குமாரின் "குட் பேட் அக்லி" திரைப்படத்தில் கேமியோ ரோலில் ஷாலினி நடித்திருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இன்று வரை பட குழுவினரிடமிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளி வராததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதனைப் பார்த்த அஜித் ரசிகர்கள், இந்த செய்தி உண்மையானதாக இருக்குமானால், அனைவருக்கும் ட்ரீட் கண்டிப்பாக உண்டு என மகிழ்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியுடன் விஜய் மகன் கூட்டணி.... அரசியலில் வாரிசு நுழைகிறதா..? குழப்பத்தில் ரசிகர்கள்..!