தமிழ் திரையுலகில் அதிக பட்ஜெட்டை வைத்து படம் எடுப்பவர் என்றால் அனைவரது நினைவிற்கு வருபவர் இயக்குநர் சங்கர் ஒருவரே.. எந்த அளவிற்கு பட்ஜெட் எகிர்கிறதோ, அந்த அளவிற்கு படத்தின் பிரம்மாண்டமும் அதிகமாகவே இருக்கும். பார்க்கும் ரசிகர்களை நிமிடத்திற்கு நிமிடம் ரசிக்க வைப்பது சங்கரால் மட்டுமே முடியும். அந்த அளவிற்கு இவரது படைப்புகள் பிரமாண்டமாக இருக்கும்.

உதாரணத்திற்கு, முதல்வன் திரைப்படத்தில் அப்பொழுதே "முதல்வனே முதல்வனே "பாடலில் பாம்புகளுக்கு மணிவண்ணன், வடிவேலு போன்றவர்களை அனிமேஷன் ஆக வைத்திருப்பார், அடுத்ததாக 'அந்நியன்' திரைப்படத்தில் "கண்ணும் கண்ணும் நோக்கியா" பாடலில் கண்ணாடி மாளிகையிலேயே செட்டை அமைத்து பிரம்மாண்டப்படுத்தியிருப்பார். அதேபோல் நண்பன் படத்திலும், சிவாஜி படத்திலும், எந்திரன் படத்திலும் பிரம்மாண்டங்களுக்கு பஞ்சமே இல்லை.
இதையும் படிங்க: இக்கட்டான சூழ்நிலையிலும் இயக்குநர் சங்கர் போட்ட உருக்கமான பதிவு..! ரசிகர்கள் நெகிழ்ச்சி..!

இப்படி இருக்க 1996 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான "இந்தியன்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த படம் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று தமிழ் சினிமாவின் சிறந்த படமாக இன்று வரை விளங்கி வருகிறது. இந்த இடத்தை தற்பொழுது வரை யாராலும் நிரப்ப முடியாத படமாக இப்படம் உள்ளது.

இந்த சூழலில் யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை, நடிகர் சங்கரின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியிலேயே முடிந்து வருகிறது. அவருடைய சொத்துக்களும் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டு உள்ளது. அதிலும் சங்கர் இந்தியன் 2 படத்தை இயக்கும் பொழுது கிரேன் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பலரது கோபத்தை கொட்டி தீர்க்க வைத்தது. இதனைத் தொடர்ந்து கொரோனா போன்ற பிரச்சனைகளின் காரணமாக படத்தின் படப்பிடிப்புகள் தள்ளிப் போய்க் கொண்டே இருக்க, ரெட்ஜெண்ட் நிறுவனத்தின் உதவியுடன் கடந்தாண்டு ஜூலை 12ஆம் தேதி இப்படம் திரையில் வெளியிடப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக அமைந்தது இத்திரைப்படம். காரணம் இப்படத்தில் கமல்ஹாசன் நீண்ட நேரம் பேசுவதாகவும், படத்திற்கும், கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும், நடிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என படம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இதனால் தான் படத்தின், இசைவெளியீட்டு விழாவில் மிகுந்த மனவேதனையில் சங்கர் இருந்தார் என்பது அனைவருக்கும் புரிந்தது.

இந்த நிலையில், இப்படம் கண் துடைப்பிற்கான படம் என்றும் இந்தியன் 3 தான், முதல் பாகத்தின் அடுத்த தொடர்ச்சியாக வர இருக்கும் படம் என்றும் கூறியிருந்தனர். ஆனால் அதற்கு சிறிது இடைவெளியில் இந்த படம் தேவைப்படுகிறது, ஆதலால் தான் இப்படத்தை திரையிட்டோம் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக இந்தியன் 3 படத்திற்கான அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்தியன் திரைப்படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை முன்னெடுத்து நடத்த லைகா நிறுவனமும், ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனமும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்க இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை பார்த்த ரசிகர்கள், சங்கரின் படைப்புகளை பெரிதும் விரும்பும் நாங்கள், இந்தியன் 3 படத்தில் அவர் மீதுள்ள மீதி நம்பிக்கை இழக்காத படிக்கு நல்ல படைப்பை தருவார் என்று நம்புகிறோம் என இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ED யிடம் டைரக்டர் ஷங்கர் சிக்கியது எப்படி? சிக்க வைத்த பத்திரிக்கையாளர்..! முழு பின்னணி..!