நடிகை ஸ்ருதிஹாசன் என்றாலே அவர் உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருடைய அடையாளத்தில் ஒருபோதும் முன்னேற நினைக்காத இவர், தனது சொந்த முயற்சியால், இன்று முன்னணி நடிகையாகவும் பாடகியாகவும் உலகம் முழுவதும் வளம் வந்து கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட நடிகை, கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் உருவான "உன்னைப் போல் ஒருவன்" திரைபடத்தில் முதன்முறையாக தனது பாடலை பாடினார். இதனால் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமான இவர், அடுத்த கட்டமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான "ஏழாம் அறிவு" திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் முதன் முதலில் பாடிய பாடலும், முதன் முதலில் நடித்த படமும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு என மிகப்பெரிய புகழை தேடி தந்தது.
இதையும் படிங்க: விரைவில் "இந்தியன் 3"... சங்கர் மாறலாம் அவரின் படைப்பு மாறாது..!

இந்த நிலையில், பல படங்களில் நடிப்பதுடன் மட்டும் நிறுத்தி கொள்ளாமல், தனியாக ஆல்பம் பாடலையும் உருவாக்குவதிலும் இவர் வல்லவராக இருப்பதால், இவர் தனது குரலில் பாடிய காதலிக்க நேரமில்லை பிரேக்கப் பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை தந்தது. அதன் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இவர் குரலில் இயக்கிய பாடல், மட்டுமல்லாது அதில் வரும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பல பேச்சுக்களை வாங்கித் தந்தது.

இதனைத் தொடர்ந்து, நடிகை ஸ்ருதிஹாசன் தனுஷ் உடன் "3" படத்தையும், விஜயின் வேதாளம், புலி படத்திலும், விஷாலின் பூஜை படத்திலும், சமீபத்தில் வெளியான "சலார்" திரைப்படத்திலும் நடித்து தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பிரபலமானார். இவர் அடுத்ததாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்டவர்களுடன் "கூலி" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தில் மேஜிக் செய்திருக்கும் லோகேஷ், இந்த படத்தில் ரஜினியை வைத்து மிகப்பெரிய மேஜிக் செய்திருப்பார் என அனைவரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சுருதிஹாசன், தான் படத்தில் நடிப்பதற்கு முன்பாக, கமல்ஹாசனின் வாரிசு என்பதாலேயே, பலரிடம் பழக முடியாது என்பதற்காகவும் பொது வழியில் சுதந்திரமாக சுற்ற முடியாது என்பதற்காகவும், தனக்கென போலியான பெயரை உருவாக்கி இருந்ததாகவும், அந்தப் பெயரிலேயே பலருடன் பழகி, தனக்கென நட்பு வட்டத்தை உருவாக்கி, உலகம் முழுவதும் சுற்றியதாக அவர் கூறியுள்ளார். இது தவறாகவே இருந்தாலும் நான் பெயரை மாற்றியதால் தான், பலர் என்னுடன் சகஜமாக பேசி பழகியதாக ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

ஏற்கனவே நடிகர் கமலஹாசன் தாக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறிவரும் நிலையில், அவரது மகளான ஸ்ருதிஹாசன் கடவுள் இல்லை என்றால் இன்று நான் இல்லை என சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மறைந்தார் பழம் பெரும் நடிகை புஷ்பலதா... சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்