வரும் 26 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன், மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா சந்தித்து பேச உள்ளார்.
தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்து வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் பரஸ்பர சவால்கள் திமுக, பாஜக விடையே அதிக அளவில் வெடித்து தற்போது அது ஈகோ யுத்தமாக மாறிக்கொண்டிருக்கிறது.

இளைஞர்களான அண்ணாமலையும், உதயநிதியும் கட்சியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் தைரியமாக ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் தாக்கி பேசியும் சவால் விடுத்தும் வருகின்றனர்.
போதாத குறைக்கு நடிகர் விஜய் வேறு ஒரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் என்னும் பெயரில் கட்சியை தொடங்கி விட்டதால் ஓட்டு சதவீதம் அதிக அளவில் விஜய் பக்கம் சாய்ந்து உள்ளதாக கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இதில் ஈகோ பார்க்கக் கூடாது… மோடி-அமித் ஷாவிடம் நேருக்கு நேர் எகிறிய ராகுல் காந்தி..!

ஏற்கனவே தமிழகத்தில் கூட்டணி விஷயத்தில் கட்சிகள் பாஜகவை பார்த்து தெறித்து ஓடும் நிலையில் விஜய் வேறு கூட்டணி ஆட்சி அமைப்போம் என்றும் தொடர்ந்து சொல்லி வருகிறார்.
இந்த நிலையில் பாஜகவின் தேர்தல் வியூகங்கள் எப்படி இருக்க வேண்டும், திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு எவ்வாறு பதிலடி கொடுக்க வேண்டும், தமிழக பாஜகவின் அடுத்த கட்ட செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் வரும் 26 ஆம் தேதி கோவை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அண்ணாமலை விவாதிக்க உள்ளதாக தெரிகிறது. இது மட்டும் இன்றி மேலும் சில உட் கட்சி விவகாரங்கள் மற்றும் தமிழக அரசு தொடர்பான விஷயங்களையும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வரும் 25ஆம் தேதி மாலை கோயம்புத்தூர் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அன்று இரவு ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார். மறுநாள் காலை கோவை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் பிரம்மாண்ட புதிய அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இதையும் படிங்க: மோடியின் அமெரிக்கப் பயணத்தால் மணிப்பூர் முதல்வர் ராஜினாமா..? அமித் ஷாவின் அகில உலக அரசியல் கணக்கு..!