கடந்த 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு கதை பாடட்டுமா சார் என்ற தொலைக்காட்சி தொடர் மூலமாக அறிமுகமானவர் நடிகை ப்ரீத்தி சர்மா.

அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியல் மூலமாக பிரபலமானார்.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சித்தி 2, பூவே உனக்காக, அபியும் நானும், வானத்தை போல, கண்ணான கண்ணே, திருமகள் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.

இதையும் படிங்க: எஸ்.வி சேகரை திருமணம் செய்த ஷோபனா..! சீரியல் புரோமோ ட்ரோல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை..!
இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார்.

சின்னத்திரையையும் தாண்டி வெள்ளித்திரையிலும் அறிமுகமாகியிருக்கிறார். கட்டதுரைக்கு கட்டம் சரி இல்ல மற்றும் தி ஹார்வெஸ்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

எப்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ப்ரித்தி சர்மா, வாழ்க்கையை ஜாலியாக எஞ்சாய் பண்ணுவது வழக்கம்.

அடிக்கடி அவர் சுற்றுலா செல்வதும், போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிடுவதையும் தவறாமல் செய்து வருகிறார்.

அப்படித்தான் ஊட்டி சென்ற போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த நிலையில், இப்போது கோவையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

மாடர்ன் உடையில் மயக்கும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சல்வார் அணிந்த சொர்க்கமே..! பிங்க் சல்வாரில் பளீச் என மின்னிய ஷிவானி நாராயணன்!