நடிகை ரைசா வில்சன் தன்னுடைய பிகினி உடை புகைப்படங்களை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர் தான் ரைசா வில்சன். தற்போது 36 வயதாகும் இவர் தன்னுடைய இளம் வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து, பின்னர் நடிப்பிலும் ஆர்வம் காட்ட துவங்கினார்.

இதையும் படிங்க: கடற்கரையை கவர்ச்சியால் கொந்தளிக்க வைத்த மடோனா செபாஸ்டியன் - வைரல் போட்டோஸ்!
இவரை தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தது உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

முதல் சீசனிலேயே கலந்து கொண்ட ரைசா, முக்கிய போட்டியாளராக இருந்த நிலையில்... போட்டி அதிகரித்த காரணத்தால், 63 வது நாளில் வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்கு முன்பு, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தில் கஜோலின் பர்சனல் செகரட்டரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இந்த கதாபாத்திரம் பெரிதாக கவனிக்கப்படாத நிலையில், பிக் பாஸ் கொடுத்த அடையாளம் இவரை ஹீரோயினாக மாற்றியது.

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். அழகிய காதல் கதைகள் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றினார். கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான 'கருங்காப்பியம்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

"தி சேஸ்" திரைப்படத்தில் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகி உள்ளார். தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்றும் விதமாக ரூப் டாப்பில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில், சிவப்பு நிற பிகினி உடையுடன் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

இவரது இந்த ஹாட் புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.

இதையும் படிங்க: மாடர்ன் பட்டாபூச்சியாய் மாறிய ரகுல் ப்ரீத் சிங்! சுண்டி இழுக்கும் ஹாட் போட்டோஸ்!