தமிழகத்தில் "சின்ன குஷ்பூ" என ரசிகர்கள் மத்தியில் அன்புடன் அழைக்கப்படுபவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. தனது சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சேனல்களில் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி ஹிரோயினாக அறிமுகமானது வருடைய 16 வயதில் தான். அப்பொழுது இவரை கவனித்த இயக்குனர் பூரி ஜெகன்நாத் தன்னுடைய இயக்கத்தில் வெளியான 'தேசமுருடு' என்ற திரைப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக முதன் முதலில் இவரை நடிக்க வைத்தார். இதன் மூலமாக முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் ஹன்சிகா.

இதனை அடுத்து, அடுத்த வருடமே 'பிந்தாஸ்' எனும் கன்னட திரைப்படத்தில் புனீத் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்து கன்னட திரையுலகில் தனக்கான அந்தஸ்த்தை பெற்றார். பின் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'மாப்பிள்ளை' என்ற படத்தில் நடித்து இங்கு தனக்கான ரசிகர்களை உருவாக்க நினைத்தார்.
இதையும் படிங்க: குடும்ப குத்துவிளக்காக ஜொலிக்கும் ரம்யா பாண்டியனின் எலகென்ட் போட்டோஸ்!

ஆனால் முடியவில்லை. இந்த சூழலில், 2011-ம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக 'எங்கேயும் காதல்' படத்தில் நடித்தார் ஹன்சிகா, இந்த படத்தில் அவரை பார்த்த இளசுகள், தமிழகத்திற்கு கிடைத்த 'சின்ன குஷ்பூ' என அவரை அழைக்க ஆரம்பித்தனர். பின் அவருக்காக ஒரு ரசிகர் படையே இங்கு உருவானது.

இதனை தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸி நடிகையாக மாறிய ஹன்சிகா, அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார். அந்த வகையில் ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, வேலாயுதம், தீயா வேலை செய்யனும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட், போகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும், ஹன்சிகா எந்த அளவிற்கு அழகோ அதே அளவிற்கு உதவி செய்வதிலும் அழகானவர் என்றே சொல்லலாம். மிகவும் அழகாக ஓவியம் வரையும் திறமை கொண்டவர் ஹன்சிகா, ஆதலால் தான் வரையும் படங்களை விற்று குழந்தைகள் காப்பகத்திற்கு உதவி செய்வார்

மற்றும் இதுவரை 20 குழந்தைகளின் படிப்பு செலவுகளை அவர் ஏற்று கொண்டு உள்ளாராம். இப்படி பட்ட ஹன்சிகா, தமிழை கற்று கொள்வதில் எந்தவித ஆர்வத்தையும் காண்பிக்காததால் இவருக்கு தமிழகத்தில் மார்க்கெட் குறைந்தது.

இதனால் பல ஹீரோயின்கள் போல் திருமணம் செய்து கொண்டு அழகான குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடிவு செய்த ஹன்சிகா மோத்வானி,

தனது நீண்டகால காதலரான தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை 2022 டிசம்பர் 4 அன்று ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் மிகவும் விமர்சையாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணம் ஆன பின்பும் அழகில் ஒரு துளி கூட குறையாத ஹன்சிகா, தனது அழகான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: CSK ஆட்டத்தை பார்க்க வந்த AK... கூடவே இருந்த SK; உற்சாகத்தில் ரசிகர்கள்!!