சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இசையப்பாளர் ஜிவி பிரகாஷ், சைந்தவி, இருவரும் பிரிவதாக கூறி விவாகரத்து வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளனர். 12 வருட காதல் திருமண வாழ்க்கையை முறித்து கொள்ள நினைக்கும் இவர்களை மீண்டும் சேர்த்து வைக்க குடும்ப நல நீதிமன்ற நிதிபதிகளும் போராடி வருகின்றனர்.

அந்த வகையில், சமீபத்தில் இந்த மனுவானது சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி அவர்கள் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜிவி பிரகாஷ், சைந்தவி, ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி, இருவரும் மனமுவந்து பிரிவதாக நீதிபதியிடம் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்.
இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி டைவர்ஸ் விவகாரம்... கலாய்த்து தள்ளிய ப்ளூசட்டை மாறன்!!

அதே நேரத்தில் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்தாலும் கெரியர் என்று வரும்பொழுது இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகின்றனர். உதாரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜிவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து சைந்தவி பாடியது நம் அனைவருக்கும் தெரியும்.

இதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு வெளியான "பேச்சிலர்" திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டையும் பெற்ற நடிகை திவ்யபாரதியின் பெயர் இவர்கள் குடும்ப சண்டையில் ஒலித்துள்ளதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். தமிழ்த் திரையுலகில் நுழைவதற்கு முன்பு, மாடலாக இருந்த திவ்ய பாரதி, 2015ம் ஆண்டில் "மிஸ் எத்னிக் ஃபேஸ் ஆஃப் மெட்ராஸ்" பட்டத்தையும், அதே ஆண்டில் "பிரபலமான புதிய முகம் மாடல் என்ற பட்டத்தையும் வென்றார். பின்னர் 2016ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற அழகி போட்டியில் 'பிரின்சஸ் ஆஃப் கோயம்புத்தூர் 2016' என்ற பட்டத்தைப் பெற்றார்.

இதனை தொடர்ந்து, பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார். பின் சில படங்களில் நடித்த திவ்யபாரதி, தற்பொழுது வெளியான யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலருடன் நடிகை திவ்யபாரதியும் இணைந்து நடித்துள்ள இந்தியாவின் முதல் கடல் சார்ந்த பேய் படம் தான் 'கிங்ஸ்டன்'. இப்படத்திலும் ஜீவியுடன் இவர் இணைந்து நடித்துள்ளதால் ஜீவிக்கும் திவ்யபாரதிக்கும் இடையே நெருக்கமான உறவு உள்ளது என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ள திவ்ய பாரதி, "எனக்கு எந்தத் தொடர்பும் இல்லாத தனிப்பட்ட குடும்ப விவகாரத்தில் என் பெயர் இழுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.யின் குடும்பப் பிரச்சினைகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வெளிப்படையாகச் சொன்னால், நான் ஒரு நடிகரை ஒருபோதும் டேட் செய்ய மாட்டேன், நிச்சயமாக ஒரு திருமணமான ஆணுடன் டேட்டிங் செய்ய மாட்டேன். ஆதாரமற்ற வதந்திகள் என் கவனத்தை ஈர்க்கத் தேவையில்லை என்று நம்பி நான் இதுவரை அமைதியாக இருந்தேன்.

இருப்பினும், இது ஒரு எல்லையைத் தாண்டியது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு வலிமையான, சுதந்திரமான பெண், நான் வதந்திகளால் சோர்ந்து போகமாட்டேன். எதிர்மறையைப் பரப்புவதற்குப் பதிலாக, ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம். எனது எல்லைகளை மதிக்கவும். இந்த விஷயத்தில் இது எனது முதல் மற்றும் இறுதி அறிக்கை" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்துக் கோரி மனு.. மனமுவந்து பிரிவதாக நீதிமன்றத்தில் விளக்கம்..!