சினிமாகாரன் நிறுவன தயாரிப்பில், ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில், கே.மணிகண்டன், சான்வே மேகானா, குரு சோமசுந்தரம், நிவேதிதா ராஜப்பன் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படமான "குடும்பஸ்தன்" திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சான்வி மேக்னா.

இப்படத்தில் மிகவும் அழகாக "சோறு தானே போட்டேன்" என கூறி தற்பொழுது அனைவரது மனதிலும் ட்ரெண்டிங்கில் நிற்கிறார் "குடும்பஸ்தன்" படத்தின் கதாநாயகியான சான்வி மேக்னா. இதனால் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இப்படி இருக்க, தற்பொழுது தெலுங்கில் இவர் நடிப்பில் ஏ ஐ தொழில்நுட்ப பயன்பாட்டில் உருவாகி இருக்கும் "ரு..... ரு...." என்ற பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவதுடன் பட வாய்ப்புகளும் வரிசைகட்டி நிற்கிறது.
இதையும் படிங்க: "சினிமா கஷ்டம் கொடுத்தாலும் பணமும் விருதும் சேர்த்து கொடுக்கும்" - மணிகண்டன் ஓபன் டாக்..!

இந்த நிலையில், இவரது நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படமும் ஓடிடி தளமான "ஜீ 5"யில் வெளியாகி 50 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர் என போஸ்டர் போட்டு சமீபத்தில் மகிழ்ந்து இருந்தனர் படக்குழுவினர். இதனை தொடர்ந்து தற்பொழுது பல படவாய்ப்புகளை கையில் வைத்திருக்கும் சான்வி மேக்னா தனது சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளார்.

இந்த சூழலில், சமீபத்தில் நடிகர் மணிகண்டனை குறித்து தனது இஸ்தாவில் பதிவிட்டுள்ளார் சான்வி. அதில், "உங்களைப்போல திறமை வாய்ந்த நடிகரோடு பணிபுரிந்தது ஓர் அழகான அனுபவம். 'குடும்பஸ்தன்' படம் மூலம் அருமையான இணை நடிகர் மட்டுமன்றி சிறந்த நண்பரும் கிடைத்திருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

இப்படி இருக்க, தனது இன்ஸ்ட்டா பதிவில் தனது அழகை வெளிப்படுத்தும் புகைப்படங்களை மட்டும் பதிவிடும் சான்வி, கொஞ்சம் வித்தியாசமாக மொத்த அழகையும் பிரதிபலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குடும்பஸ்தன் கதாநாயகி போட்ட இன்ஸ்டா பதிவு..! ஒரே வரியில் மணிகண்டனை சிக்கவைத்த சான்வி மேக்னா..!