ஆரம்ப சினிமா வாழ்க்கையில் கையில் பணம் கூட இல்லாமல், தான் உழைத்த சம்பளமான ரூ.150க்காக பல கிலோமீட்டர் அலைய வைக்கபட்டவர் தான் இன்று மக்களால் போற்றப்படும் நடிகர் மணிகண்டன். தன் நண்பர்களின் உதவியில் பல நாட்கள் வாழ்க்கையை கழித்து கொண்டு இருந்தவரை உற்சாகப்படுத்திய அவரது நண்பர்கள், பிரபல டீவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் உற்சாகப்படுத்த, நண்பர்களின் ஆசைக்காக தனது கெரியரை சினிமாவில் ஆரம்பித்தார்.

பின் சினிமாவில் பல பிரபலங்களுக்கு பின்னணியாக குரல் கொடுத்து வந்தார். நீண்ட நாட்கள் சினிமா வாழ்க்கையில் சரியான சம்பளமும் உணவும் இல்லாமல் கஷ்டப்பட்ட மணிகண்டனுக்கு பல நாள் உழைப்பின் பலனாக துணை நடிகராக "விக்ரம் வேதாவில்" மாதவன் மற்றும் விஜய்சேதுபதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் 'காதலும் கடந்து போகும்' போன்ற படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதையும் படிங்க: அடடே...! சான்வி மேக்னாவா இது...! அசத்தும் அழகில் அசரவைக்கும் உடையில்..!

இவரது நீண்ட நாள் துணை நடிகருக்கான உழைப்புக்கு பலனாக அமைந்தது சூர்யாவின் "ஜெய்பீம்" திரைப்படம். இதில் 'ராஜாக்கண்ணு' என்னும் கதாபாத்திரத்தை கண்முன் கொண்டுவந்து அனைவரையும் கண்கலங்க வைத்தார். இதனை தொடர்ந்து, ஒரு மனிதனுக்கு குறட்டை எவ்வளவு பாதிப்பை தருகிறது எனவும் காதலிப்பவர்களுக்கு குறைவுகள் பெரிதல்ல என்பதை உணர்த்தும் படமான 'குட் நைட்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதில் அவரது அபார நடிப்பின் திறமையை பார்த்த இயக்குனர் ஒருவர் 'லவ்வர்' திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

கோபத்தை குறைத்து கொண்டு உழைப்பால் முன்னேறி காண்பிக்கும் கதாநாயகனாக இப்படத்தில் நடித்து இருப்பார். இதுவரை நடித்த அனைத்து படங்கள் அனைத்திலும் ஹிட் கொடுத்த மணிகண்டனுக்கு தற்பொழுது வெளியான "குடும்பஸ்தன்" திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. தியேட்டர்களை தொடர்ந்து ஓடிடி தளங்களிலும் 50மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றி அடைந்துள்ளது.

இப்படி இருக்க, சமீபத்தில் தனியார் சேனலுக்கு மணிகண்டன் கொடுத்த பிரத்தியேகப்பேட்டையில் மனம் திறந்து பேசி இருந்தார். அதில் "சில நாட்களுக்கு முன்பு புதிய வீடு வாங்கி, அதற்கு உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து வெகுவிமர்சையாக கிரகப்பிரவேசம் செய்து இருந்தோம். அப்போது என் பிரண்ட்ஸிடம் சென்ற என் அப்பா, "அவனை நான் பெத்தேன், படிக்க வைத்தேன் அவ்வளவுதான், மத்தபடி மீதி எல்லாவற்றையும் நீங்க தான் பாத்துக்கிறீங்க, இனியும் அவன பத்திரமா பாத்துக்கோங்க" என்று சொன்னார். அவர் கூறியது உண்மை தான்.

ஏனெனில் என்னுடைய கெரியர்ல சினிமாவிற்கு நான் தகுதியானவனா என்று நான் நினைக்கும் போதெல்லாம், சினிமாவுக்கு நீ தகுதியானவன் தான் என்று மற்றவர்களை போல போலியாக சொல்லாமல், இல்ல இப்போதைக்கு உனக்கு தகுதி இல்லை, இன்னும் நீ நிறைய கத்துக்கணும் என்று சொல்லி என் பிரண்ட்ஸ் தான் மோட்டிவேட் பண்ணுவாங்க.
அதுமட்டுமல்லாமல் கிட்ட தட்ட நாலு வருஷம் எனக்கு வேலையும் இல்ல, எங்க வீட்ல சுத்தமா காசும் வாங்கவே இல்ல, அந்த நாலு வருஷமும் என்னுடைய பிரண்ட்ஸ் பிரவீன் மற்றும் ராகேந்து தான் தினமும் காசு கொடுப்பாங்க" என அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்களுக்கு மணிகண்டன் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் பெருகியது.

இதனை தொடர்ந்து, தற்பொழுது நடந்த விருது விழா மேடையில் மனம் திறந்து பேசிய நடிகர் மணிகண்டன் தனது சினிமா பயணம் குறித்து அழகாக பேசியிருக்கிறார். அதில், "சினிமாவில் எனது பயணம் சிரமமாக இல்லை ஆனால், பொறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த இடத்திற்கு எல்லாம் நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தீர்களா என்று என்னிடம் கேட்டால், ஆமாம் என்று தான் சொல்லுவேன், ஏனெனில் அதை நான் எதிர்பார்த்தேன். எல்லாருக்கும் ஷாருக்கான் மாதிரி ஆகணும்னு ஆசை இருக்கும் தான்.
ஆனால், ஷாருக்கான் ஆவதற்கு என்ன பண்ண வேண்டும் என்று இருக்கு இல்லயா, அதுதான் எனக்கு பயமா இருக்கு. பிடித்த வேலையை செய்வதற்கு சினிமாவில் சம்பளமும் கொடுக்குறாங்க விருதும் கொடுக்குறாங்க. அப்போ எப்படி இந்த பயணம் சிரமமாகும் கண்டிப்பாக இல்லை" என அழகாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: 50வது நாளை கடந்து சாதனையில் குடும்பஸ்தன்... கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்..!