சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் தயாரிப்பில் அசோக் தேஜா இயக்கியத்தில் அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில் 2022ல் வெளியான ஒடேலா ரயில் நிலையத்தின் தொடர்ச்சி கதை தான் "ஒடேலா 2". ஒடேலா மல்லண்ண சுவாமி தனது கிராமத்தை தீய சக்திகளிடமிருந்து எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதை சித்தரிக்க கூடிய இப்படத்தின் படப்பிடிப்பு 2024 மார்ச் அன்று வாரணாசியில் தொடங்கிய நிலையில் தற்பொழுது படப்பிடிப்புகள் முடிந்து வெளியீட்டுக்காக காத்திருந்தது.

இதனை அடுத்து, பிப்ரவரி 22ம் தேதி கும்பமேளாவில் இப்படத்திற்கான டீசர் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர். அதே போல் அன்று இப்படத்திற்கான டீசர் வெளியாகி பயங்கர புயலை கிளப்பியது. யுவா, நாக மகேஷ், வம்சி, ககன் விஹாரி, சுரேந்தர் ரெட்டி, பூபால் மற்றும் பூஜா ரெட்டி ஆகியோருடன் தமன்னா பாட்டியா, ஹெபா பட்டேல், வசிஷ்ட என். சிம்ஹா ஆகியோர் பார்க்கவே பயங்கரமாக நடித்திருப்பது டீசரை பார்த்தாலே தெரிந்தது.
இதையும் படிங்க: "நிக்க தேவை பூமாதா.. நாம வாழ தேவ கோமாதா".. தமன்னாவின் டையலாக்கில் மிரட்டும் ஓடேலா-2..!

பார்க்கவே பக்தி மையமாகவும், மந்திரவாதிக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கும் மரணத்தை கண்களுக்கு முன்பாக காட்டும் அளவிற்கான தோற்றத்தில் தமன்னாவின் ஒடேலா 2 டீசர் இருக்க, அதன் ட்ரெய்லர் மற்றும் வெளியிட்டு தேதியை எப்பொழுது வெளியிடுவீர்கள் என ரசிகர்கள் கேட்டு கொண்டு இருந்தனர், நீண்ட நாள் இடைவெளிக்கு பின் ஏப்ரல் 9ம் தேதி படத்தின் டிரெய்லர் வெளியானது. மேலும், இப்படம் வரும் ஏப்ரல் 17ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த ட்ரெய்லரை விட டிரெய்லரில் இடம் பெற்ற 'நாம் நிற்பதற்கு தேவை பூமிமாதா, நாம் வாழ்வதற்கு தேவை கோமாதா; இதில் நீங்கள் வாழ கோமாதாவை கொல்ல வேண்டும் என்றில்லை, அதன் சிறுநீரை விற்றுகூட வாழலாம்" என்ற வசனம் மற்றும் முழுவதுமான ஆன்மிகம் படத்தை ஹிட் செய்யும் என அனைவரையும் நினைக்க வைத்தது. அதே சமயம் ட்ரெய்லர் வெளியான பொழுது நடிகை தமன்னா ஒடேலா 2 படம் வெற்றி அடைய வேண்டும் என்பதறகாக மும்பையில் உள்ள 'பாபுல்நாத் சிவன் கோயிலில்' சாமி தரிசனம் செய்தார்.

இதையெல்லாம் பார்த்து படம் சூப்பராக இருக்கும் போல படத்திற்கான ஃப்ரமோஷனே இவ்வளவு பயங்கரமாக உள்ளதே அப்பொழுது படம் தியேட்டரில் பார்த்தால் எப்படி இருக்கும் என நம்பிய மக்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. 'குட் பேட் அக்லி' படத்தில் நடிகர் அஜித் கூறுவதை போல் உடம்பில் கை இருக்கும், காலிருக்கும், மூக்கு இருக்கும் முழி இருக்கும், ஆனால் உயிர் மட்டும் இருக்காது என்பதை போல் படத்தில் காட்சிகள் இருந்தது, சத்தம் இருந்தது, எடிட்டிங் இருந்தது ஆனால் கதை மட்டும் பெரிதாக இல்லை என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், இப்படத்தின் முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகமும் வெற்றி அடையும் என நினைத்த தமன்னா மற்றும் படக்குழுவினருக்கு படத்தின் விமர்சனம் வருத்தமாளிப்பதாகவே இருந்தது.

இதனை தொடர்ந்து, படத்தில் இயற்கைக்கு மாறான காட்சிகள் அதிகம் இருப்பதாகவும், திரில்லர் காட்சிகள் பயமுறுத்துவதாக இல்லை எனவும் மக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் படம் வசூலில் மிகவும் பின்தங்கி கொண்டாட்டம் பெரிதாக இல்லாமல் காணப்படுவதாக சினிமா வட்டாரங்கள் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தமன்னாவை ஐஸ்கிரீமுடன் ஒப்பிட்ட விஜய் வர்மா...! சூசகமாக காதல் பிரிவை அறிவித்து வருத்தம்..!