ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கோரி நாட்டின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதலை கண்டித்து டோக்ரா முன்னணியின் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைப்போல் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள இஸ்லாமிய மக்கள் ஒன்றிணைந்து பகல்காம் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதே போல் மகாராஷ்டிரா மாநிலம் புனைவில் சிவசேனா கட்சியின் தொழிலாளர்கள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் மும்பையில் அகில இந்திய சன்னி ஜமியத்துல் உலமா அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: இந்தியா நிம்மதியா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறாங்க! தரமான பதிலடி இருக்கு.. அண்ணாமலை பரபர பேச்சு..!

இது மட்டுமல்லாது புல்வாமாவில் பகல்காம் தாக்குதலை கண்டித்து உள்ளூர்வாசிகள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மெஹபூபா முஃப்தி ஷைபா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதேபோல் இந்தியாவின் பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதலை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல் பாதுகாப்பு துறையின் தோல்வி... சீமான் பகீர் குற்றச்சாட்டு..!