பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை இந்தியா வேட்டையாடும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 27 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக தீவிரவாதிகள் ஒவ்வொருவரையும் அவரது பெயரைத் தெரிந்து கொண்டு, அவர்கள் முஸ்லிம் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் அவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் ஒருவரிடம் முஸ்லிம்கள் சொல்லும் மத போதகம் குறித்து கேட்டபோது அவர் அதைச் சொல்லாததால் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிரது. மேலும் ஒருவர் தனது கணவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற பின்னர், தன்னையும் கொன்று விடுங்கள் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி தீவிரவாதிகளிடம் கெஞ்சி உள்ளார். ஆனால் தீவிரவாதிகளோ, இங்கு நடந்ததை போய் மோடியிடம் சொல் எனக் கூறியதாக பெண் ஒருவர் அழுது கொண்டே கூறியுள்ளார்.
இதையும் படிங்க: போதையில் புத்தி மாறிய நடிகர் ஷைன் டாம் சாக்கோ படத்தில் நடிக்க தடை..! கேரள சினிமா சங்கத்தினர் அதிரடி..!

ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவதிகளின் தாக்குதல் சம்பவம் உலக நாடுகளை உலுக்கி உள்ளது. இந்த தாக்குதல் நடைபெற்ற பின்னர் பிரதமர் மோடி தனது சவுதி அரேபியா சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். சம்பவ இடத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று கள ஆய்வு செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் ஆகியோருடன் ஆய்வு நடத்தினார்.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து விட்டதால், பைசரன் பள்ளத்தாக்கு தற்போது ராணுவத்தினர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார், இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், நீ இஸ்லாமியன் இல்லை என்றால், உன்னை கொடூரமாக கொல்லுவேன் என்பது இன்றைய சிந்தனை அல்ல. சுமார் 14ம் நூற்றாண்டு முதல் பாரதத்தில் நடந்து வரும் கொடூர சிந்தனை. இப்படி சிந்திப்பவர்களை ஆதரிக்கும் அரசியல் தலைவர்கள், இப்படி சிந்திப்பவர்களை விட ஆபத்தானவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓ... இது தான் விஷயமா..! சினிமாவில் இருந்து விலகிய ரகசியத்தை உடைத்தார் நடிகை ரம்பா..!