தமிழ் திரையுலகில் தளபதியாக விளங்கும் நடிகர் விஜயின் சினிமா வாழ்க்கைக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் அவரது தந்தையான எஸ். ஏ.சந்திரசேகர் தான். இவர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்த விஜய். இன்று பல மொழி சார்ந்த மக்களின் மனதிலும் இடம்பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் நாளடைவில் அவரது தந்தையின் உதவியுடன் கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படம் நாளைய தீர்ப்பு.

இப்படத்தில் விஜயை பார்த்த மக்கள் முதலில் அவரை ஏற்று கொள்ளவில்லை அதன் பின், நடிகர் விஜயகாந்த்துடன் "செந்தூரப் பாண்டி" என்ற திரைப்படத்தில் விஜய் இணைந்து நடித்தார். அடுத்து விஜய் நடித்த "ரசிகன்" படத்தில் இவரது நடிப்பை பார்த்த பின்பு இவரை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த ரசிகர்கள் அவருக்கு "இளைய தளபதி" என்ற அடைமொழி பெயர் வைத்து கொண்டாடினர். இப்படி பல படங்களில் நடித்த விஜயின் முதல் பத்து படங்கள் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அதன்பின் வந்த அனைத்து படங்களும் ஹிட் ஆக ஆரம்பித்தது.
இதையும் படிங்க: நடிகர் விஜயின் படத்தில் மூன்று இயக்குனர்கள்... அப்பட்டமாக வெளியே வந்த ரகசியம்..!

இதனை தொடர்ந்து 1996-ல், இயக்குநர் விக்ரமன் இயக்கிய "பூவே உனக்காக" திரைப்படம் விஜய்க்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் வரிசையாக லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, மின்சாரக் கண்ணா என 90காலங்களை தாண்டி 2000த்திலும் காலடி எடுத்து வைத்தார். அதில் கண்ணுக்குள் நிலவு, குஷி மற்றும் பிரியமானவளே, ப்ரண்ட்ஸ், பத்ரி, ஷாஜஹான், யூத் ,பகவதி, வசீகரா, சிவகாசி, போக்கிரி, குருவி, தெறி,பிகில்,வாரிசு, மெர்சல் என பல படங்களை நடித்து தனது கடின உழைப்பால் இன்று ஸ்டாராக வாழ்ந்து வருகிறார்.

இப்படி 1992ம் ஆண்டு தொடங்கிய இவரது சினிமா பயணம் 2025ம் ஆண்டு முடிவடைய இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தில் தலைவராக இருக்கும் விஜய் தற்பொழுது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வரும் பாடலில், இயக்குநர்கள் அட்லீ,லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் ஆகியோர் அவரை சினிமாவில் இருந்து சென்ட் ஆஃப் செய்யும் பாடலுக்கு நடித்து வருகின்றனர். இப்படி தனது சினிமா பயணத்தை முடிவுக்கு கொண்டு வரும் விஜய் வீட்டில் ஒய்வு எடுக்காமல் இனி மக்கள் பணியில் ஈடுபட போவதாக கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் ஒரு பேட்டியில் விஜய் குறித்து பேசி இருக்கிறார். அதில், தான் இதுவரை நடிகர் விஜயின் 10 படங்களுக்கு இசையமைக்காமல் நிராகரித்ததாக கூறியிருக்கிறார். குறிப்பாக சங்கரின் "நண்பன்" படத்திற்கு இசையமைக்கும் முன்பு விஜயின் 10 படங்கள் தன்னிடம் வந்தது அவற்றை வேண்டாம் என மறுத்துவிட்டேன். காரணம், நான் எப்போதும் வேலையில் ரிலாக்ஸ் ஆக இருக்க விரும்புவேன், பல படங்களை ஒரே நேரத்தில் ஒப்புக் கொண்டால் பிரஷர் அதிகமாகிவிடும் பின்பு பாடல் இசைக்க முடியாது என்பதால் தான் இப்படி செய்ததாக அவர் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: பேயாக மாறிய ராஷ்மிகா... குழந்தையை பூதமாக மாற்றி இருக்கிறார் டைரக்டர் என நெட்டிசன்கள் புலம்பல்..!