உலக அளவில பிரபலமான தனியார் டிவி நிறுவனம் தான் ஸ்டார். 1990-ல ஸ்டார் டிவ-னு ஆரம்பிக்கப்பட்டுச்சு. ஆசிய ரசிகர்களுக்காக ஸ்டார் பிளஸ் உள்ளிட்ட ஐந்து டிவி சேனல்கள் துவங்கப்பட்டன. அதன்பின் 1992ம் ஆண்டு ரூபர்ட் முர்டாக் நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் அதன் பெரும்பான்மை பங்குகளை வாங்கினாங்க. அதன்பின் ஸ்டார் மூவீஸ், சானல் வி, ஸ்டார் நியூஸ் உள்ளிட்ட சானல்கள் இந்திய ரசிகர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது.

2001ம் ஆண்டில் அந்நிறுவனம் தமிழ் டிவி சேனலான விஜய் டிவியை வாங்கியது. தொடர்ந்து பல இந்திய மொழிகளில் டிவி சேனல்கள் வாங்கப்பட்டது, சில சேனல்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. 2015ம் ஆண்டில் ஓடிடி தளமான 'ஹாட்ஸ்டார்' ஆரம்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தேவதை போல் இருக்கும் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

2019ம் ஆண்டு டிஸ்னி நிறுவனம் அந்த நிறுவதனை கைப்பற்றுச்சு. 2020ம் ஆண்டில் ஹாட்ஸ்டார், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எனப் பெயர் மாறியது. கடந்த வருடம் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டிஸ்னி மற்றும் ரிலயன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்படும் ஒப்பந்தம் செய்துகொண்டன.

இதுவரையில் 'டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்' என்று செயல்பட்டு வந்த ஓடிடி தளம் இனி, 'ஜியோ ஹாட்ஸ்டார்' என மாறி இருக்கு. இப்போ இதுக்கான அதிகார பூர்வ அறிவிப்பும் வந்துருக்கு.
இதையும் படிங்க: வாழ்க்கையை தொடங்கிய முத்துப்பாண்டி - இசக்கி; சௌந்தரபாண்டி கனவு பலிக்குமா? - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்!