சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, அதிமுக கட்சியை தனது கட்டுக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி படாதபாடுபட்டுக் கொண்டிருப்பதாக கூறினார். அதிமுகவை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை என்பது ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் முடிவுகள் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டதாக இபிஎஸ் கூறுவதில் உண்மையில்லை என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்தார். அதாவது திமுக ஆட்சியில் பெண்களுக்கு தைரியம் வந்துள்ளதாக அவர் கூறினார். புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை வந்துள்ளதால் தான், திமுக ஆட்சியில் பெண்கள் அதிக அளவு புகார்கள் கொடுப்பதாக அவர் விளக்கம் அளித்தார். அதிமுக ஆட்சியில் பெண்கள் பொள்ளாச்சி சம்பவத்தில் புகார் கொடுக்க அச்சப்பட்டதாகவும் அமைச்சர் ரகுபதி கூறினார்.

பாரதிய ஜனதா கொண்டு வரும் திட்டங்களை வெளிப்படையாக எதிர்க்கும் எடப்பாடி பழனிசாமி, மறைமுகமாக ஆதரிப்பார் என அவர் குற்றஞ்சாட்டினார். பாஜகவின் B டீம் அதிமுக என்பது ஒவ்வொரு முறையும் நிரூபணம் ஆகிவருவதாக ரகுபதி விமர்சித்தார்.
இதையும் படிங்க: பெண் ஏடிஜிபிக்கே பாதுகாப்பில்லை...மூடிமறைத்து மவுனமாக்க முயல்வதா...எடப்பாடி, அண்ணாமலை விமர்சனம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் நாம் தமிழரின் செல்வாக்கு என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டதாக கூறினார். பல்வேறு வழக்குகளில் சீமான் கைது செய்யப்படாவிட்டாலும், நீதிமன்றத்தில் அவர் ஆஜராகத்தான் வேண்டும் என ரகுபதி குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு வந்த சோதனை.. கமிஷனர் அறையில் கேமரா.. நகரச் செயலர் கட்சியிலிருந்து திடீர் நீக்கம்..