2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி சென்னை அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்தது. அப்போது வழக்கம்போல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிஎஸ்கே அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இதுஒருபுறம் ரசிகர்களுக்கு கவலையளித்தாலும் மறுபுறம் இந்த ஆட்டத்தை காண பிரபல நடிகர் அஜீத்குமார் மைதானத்திற்கு வந்திருந்தார். அவருடன் மனைவி ஷாலினி மற்றும் மகன், மகளும் வந்துள்ளனர்.

நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் வந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த போட்டியை காண நடிகை ஸ்ருதிஹாசனும் வந்திருந்தார். சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஒரே நேரத்தில் 2 தல தரிசனத்தை கண்டு ரசிகர்கள் மெய்சிலிர்த்து போனார்கள். இதனால் ரசிகர்களின் கவனம் முழுவதும் அஜித் பக்கம் திரும்பியது.
இதனால், அஜித்தை வட்டமடித்தபடியே ரசிகர்கள் சூழ்ந்துள்ளனர். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தமிழகத்தில் 170 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கிறது. உலக அளவில் 200 கோடியை வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஊருக்கே 'தல'ன்னாலும் மனைவிக்கு புருஷன் தானே..! ஷாலினிக்கு கேக் ஊட்டிவிட்ட அஜித்..!

மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் அஜித்தின் வருகையை கண்டு வியந்து ரசித்து வருகிறார்கள். மேலும், அஜித்தின் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அமர்ந்து போட்டியை ரசித்து வருகிறார். இருவரும் சிரித்தபடியே பார்த்து ரசிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் சினிமா தாண்டி இப்போது விளையாட்டு துறையில் தீவிர கவனம் செலுத்துகிறார். இவர் கார் ரேஸிங் ஒரு பக்கம் தீவிரமாக செய்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் கூட துபாயில் நடந்த கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அணி 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

அஜித் குமார் அணி தொடங்கப்பட்ட சில வாரங்களில் முறையாக பயிற்சி எடுத்து அந்த அணி சாதனை படைத்து உள்ளது. அதேபோல் துப்பாக்கி சூடு, டிரோன் பயிற்சி, பைக் ரேஸிங் என்று பல விளையாட்டு பொழுதுபோக்கு விவகாரங்களில் அஜித் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் ஐபிஎல் மேட்ச் பார்க்கவும் இன்று அஜித் வந்தார்.
கடந்த சில போட்டிகளைக் சிஎஸ்கே தோல்வியால் ஆட்டம் பெரிதாக ஈர்க்காத நிலையில் இன்று அஜித் வந்தது பெரிய அளவில் ஆட்டத்தை விறுவிறுப்பாக பலரும் பார்க்க காரணமாக இருந்தது. அவர் மனைவி அஜித் ஷாலினி பொதுவாக தீவிரமான சிஎஸ்கே ரசிகர் என்பதால் அவருடன் சேர்ந்து பார்க்க அஜித் இந்த ஆட்டத்திற்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அஜித்தால் இல்லை எங்கள் பாடலால் தான் படம் ஹிட்..! இளையராஜாவுக்கு ஆதரவாக பேசிய கங்கை அமரன்..!