காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள தூதர்களின் எண்ணிக்கையைக் குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உட்பட அனைத்துப் பாகிஸ்தானியர்களும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது மற்றும் அட்டாரி எல்லையை மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா அறிவித்திருந்தது. இதனிடையே நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பின.
குறிப்பாக பஹல்காம் பகுதியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாதது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. குறிப்பாகத் தாக்குதல் நடந்த பைசரன் புல்வெளி தளத்தில் பாதுகாப்புப் படைகள் ஏன் இருக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தக் கேள்வியை எழுப்பினார்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தோம்.. பயத்தில் சரண்டர் ஆன பாக். ராணுவ அமைச்சர்!!

அவரை தொடர்ந்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் உட்பட பலர் இந்தக் கேள்வியை எழுப்பினர். இதற்கு விளக்கம் அளிர்த்த மத்திய அரசு, வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் அமர்நாத் யாத்திரைக்கு முன்னதாக பைசரன் பகுதியில் பாதுகாப்புப் படை குவிக்கப்படுமாம். அதாவது ஜூன் மாதம் தான் இந்த ரூட் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும். அமர்நாத் குகைக் கோயிலுக்கு இந்த பைசரன் புல்வெளி வழியாகச் செல்லும் பக்தர்கள் இங்கு ஓய்வெடுக்கும்போது அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யப் பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்படுவார்கள்.

ஆனால், புனித யாத்திரை சீசன் தொடங்குவதற்கு முன்பே, அதாவது பாதுகாப்புப் படை வீரர்கள் களமிறக்கப்படும் முன்பே, சில உள்ளூர் சுற்றுலா நிறுவனங்கள் இங்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்றுள்ளனர். கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளை இந்தப் பகுதிக்கு அழைத்துச் செல்லத் தொடங்கியதாக மத்திய அரசு கூறுகிறது.
இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் வருகை முன்கூட்டியே தொடங்குவது குறித்து உள்ளூர் நிர்வாகத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் இதன் காரணமாகவே பாதுகாப்புப் படை வீரர்கள் அனுப்பப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒவ்வொரு உயிருக்கும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்.. பழி வாங்குவோம்.. பாக்.-ஐ எச்சரித்த இந்தியா!!