இசையையும், இளையராஜாவையும் எப்படி பிரித்து பார்க்க முடியாதோ, அதேபோன்றுதான் இளையராஜாவையும் தமிழர்களையும் பிரித்து பார்க்க முடியாது. அந்த அளவுக்கு தமிழர்கள் வாழ்வில் பின்னி பிணைந்துவிட்ட அற்புத கலைஞன், தனது அடுத்த சாதனைக்கு தயாராகி விட்டார். ஆம், மார்ச் 8-ந் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஈவெண்டிம் அப்பல்லோ அரங்கில் தனது முதலாவது சிம்பொனியை இசைக்க உள்ளார். Valient என்ற பெயரில் அவர் எழுதியுள்ள சிம்பொனி இசையை Royal Philharmonic Orchestra குழுவினர் வாசிக்க உள்ளனர். இளையராஜா எழுதியுள்ள இந்த சிம்பொனியை பிரபல இசை கண்டக்டர் மைக்கேல் டோம்ஸ் வழிநடத்த உள்ளார்.

சிம்பொனி இசைக்க லண்டன் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த இளையராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசும்போது, இந்த இசை ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை என்றார். இது என்னுடைய பெருமை மட்டும் அல்ல உங்களுடைய பெருமையும் தான். உங்கள் பெருமையைத் தான் நான் லண்டனுக்கு கொண்டு செல்கிறேன் என்றார். 80-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் என் சிம்பொனி இசையை வாசிக்க உள்ளனர். இது இந்தியாவின் பெருமை. Incredible India மாதிரி நான் Incredible Ilayaraja என்று புன்னகை பூத்த முகத்துடன் அவர் பேட்டியளித்தார்.
இதையும் படிங்க: எங்கள் இசை பள்ளி.. இசையமைப்பாளராலேயே போச்சு..! இளையராஜாவை நம்பியதால் பறிபோன சொத்துக்கள்..!

அப்போது செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டு, இசையமைப்பாளர் தேவா தன்னுடைய பாடல்களை தற்போதைய இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்துவது தனக்கு சந்தோஷம் என்றும் அதற்கு காப்பிரைட் கேட்கப்போவதில்லை என்றும் பேசியது குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் சற்று கடுப்பான இளையராஜா, அவசியம் இல்லாததை என்னிடம் கேட்காதீர்கள் என கடிந்து கொண்டார். இருப்பினும் உடனே முகத்தை மலர்ச்சியாக வைத்துக்கொண்டு உங்கள் அனைவருக்கும் இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக சிம்பொனி இசைக்க உள்ள இளையராஜாவை அவரது வீடுதேடிச் சென்று சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தை தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரும் நேரில் சென்று இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இளையராஜா இசையமைக்க உள்ள சிம்பொனிக்கு Valient என்று பெயர்சூட்டி உள்ளார். இதற்கு வீரம் மிக்க என்று பொருள். பொதுவாக மேற்கத்திய நாடுகளில் போர் காலங்களுக்கும், உணர்ச்சி மிக்க காதல் தருணங்களுக்காகவும் மன்னர்களை மகிழ்விக்க சிம்பொனிகள் இசைக்கப்பட்டன. அந்தவகையில் தமிழின் மரபார்ந்த மனத்தோடு, இந்த மண்ணின் வீரத்தை பறைசாற்றும் வகையில் இளையாராஜாவின் இந்த Valient இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: எங்கள் இசை பள்ளி.. இசையமைப்பாளராலேயே போச்சு..! இளையராஜாவை நம்பியதால் பறிபோன சொத்துக்கள்..!