பெண்ணின் பாலுணர்வை வெளிப்படையாக பேசும் தமிழ் படம் "பேட் கேர்ள்"! சர்வதேச விழாவில் "நெட்பேக்" விருதை பெற்றது. அறிமுக பெண் இயக்குனர் வர்ஷா பரத் இயக்கிய இந்த படத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் தயாரித்து உள்ளனர். விரைவில் வெளிவர இருக்கும் இந்த படத்தின் டிரைலர் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி அன்று வெளியானது. அன்று முதல் இந்த படத்தை பற்றிய சர்ச்சை கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
டீன் ஏஜ் பெண்ணின் பாலுணர்வை வெளிப்படையாக பேசும் படம் இது. ரோட்டர் டாம் நகரில் நடைபெற்ற நெதர்லாந்து சர்வதேச படவிழாவில் இந்த படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதன் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தை இந்த திரைப்படம் பெற்றுள்ளது.
பட விழாவில், சினிமாவை மேம்படுத்துவதற்கான ஆசிய வலை அமைப்பு (NETPAC) என்ற விருது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. உலகளாவிய சினிமா அரங்கில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்தும் இந்த விருது கிடைத்திருப்பது அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் மற்றும் மற்றும் படக் குழுவினருக்கு பெருமையான மதிப்புமிக்க தருணமாகும்.
இதையும் படிங்க: என் கழுத்தில் கத்தி... வேலைக்காரி கீதா இல்லையென்றால்… நடுக்கத்துடன் சம்பவத்தை விளக்கிய சைஃப் அலி கான்..!

இதற்கு முன்பாக இந்த விருதை பெற்ற தமிழ் படம் 2019 ஆம் ஆண்டில் அருண் கார்த்திக்கின் "நாசர்" ஆகும்.இந்த விருது, கடந்த காலத்தில் மணி கவுலின் நவுகர் கி கமீஸ் (1999) மற்றும் அடூர் கோபால கிருஷ்ணனின் விதேயன் (1995) ஆகிய இந்திய மொழி படங்களுக்கும் கிடைத்துள்ளது.
அஞ்சலி சிவராமன், சாந்திப்பிரியா, ஹிருது ஹாரூன், டீஸர் அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இசை மேதை அமித் திரிவேதி மிகவும் எதிர்பார்ப்புடன் இந்த படத்தில் அதிகம் ஆகி இருக்கிறார். ஒளிப்பதிவாளர்கள் பிரீத்தா ஜெயராமன், ஜெகதீஸ் ரவி மற்றும் பிரின்ஸ் ஆண்டர்சன் ஆகியோரால் காட்சிகள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி செல்லும் பிராமண பதின்ம வயது ( டீன் ஏஜ்) பெண்ணின் வாழ்க்கையை மையமாக கொண்டிருந்த இந்த படம் சமூக அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறது. ஒரு பையனுடன் டேட்டிங் செய்ய தொடங்கி அதற்காக அவமானப்படுவது போன்ற காட்சிகளும் படத்தில் இடம் பெற்று இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் ஆகியோரை குறி வைத்து, பிராமண சமூகத்தின் சார்பில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பதற்கு கடுமையான எதிர்ப்பு குரல் எழுந்தது. "பிராமண அப்பா, அம்மாவை திட்டுவது என்பது மிகவும் வலிமையானது என்பது தற்போதைய ட்ரெண்டிங் அல்ல உங்கள் சொந்த சாதிப் பெண்களுடன் முயற்சி செய்து உங்கள் சொந்த குடும்பத்தினரிடம் முதலில் அதை காட்டுங்கள்" என்று திரைப்பட தயாரிப்பாளர் மோகன் ஜி சத்ரியன் விமர்சித்திருக்கிறார்.
இந்த விமர்சனத்திற்கு, நடிகைசாந்தி பிரியா பதிலடி கொடுத்திருந்தார். "இந்தப் படம் யாரையும் காயப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. மாறாக பல்வேறு சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டி, ஒரு' பேசு பொருளை' தொடங்கி, பச்சாதாபத்தை வளர்ப்பது இதன் நோக்கம் ஆகும்.
கலை என்பது வெளிப்பாட்டின் ஒரு ஊடகம். சினிமா என்பது பெரும்பாலும் சமூகம் உறவுகள் மற்றும் அடையாளங்களின் சிக்கல்களை பிரதிபலிக்கிறது. இது போன்ற திரைப்படங்கள் ஒரே மாதிரியான கருத்துக்களை உடைத்து ஆராயப்படாத கதைகளை வெளிச்சம் போட்டு காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

அவை பெரும்பாலும் ஒரு சமூகத்தில் மட்டுமல்ல அனைத்து சமூகங்களிலும் உள்ள சமூக விதிமுறைகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளன. ஒரு பிராமணனின் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த எவருடைய வாழ்க்கையை சித்தரிப்பது என்பது அவமானம் அல்ல. மாறாக கதை சொல்வது பற்றியது. எதார்த்தத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூல, உண்மையான கதாபாத்திரங்களை முன் வைப்பது" என்று சமூக வலைதள பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
"வெற்றிமாறனும் அனுராக் காஷ்யப்பும் சமூக கருப்பொருள்களில் துணிச்சலான மற்றும் தளராத பார்வைக்கு பெயர் பெற்றவர்கள். சமத்துவம் இன்மைகள் மற்றும் சங்கடமான உண்மைகளை சமாளிப்பது அவர்களின் நோக்கம். யாரையும் புண்படுத்துவது அல்ல அவர்களது நோக்கம். மாறாக உரையாடல்களை தூண்டுவதும் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை நுணுக்கங்களை பற்றி சிந்திக்க பார்வையாளர்களை ஊக்குவிப்பதும் ஆகும்.
கலை என்பது அனைவருடைய ஆறுதல் மண்டலத்துடன் ஒத்துப் போக வேண்டிய அவசியம் இல்லை. அது சிந்தனையை தைண்டி நமது சொந்தம் தாண்டிய அனுபவங்களுக்கான பச்சாதாபத்தை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு உள்ளது" என்றும் நடிகை சாந்தி பிரியா கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: பான் இந்தியா பட நாயகியோடு ரொமான்ஸ் பண்ண போகும் அஷோக் செல்வன்; புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!