எப்படி பிரதிப் ரங்கநாதன் மேடைகளில் பேச செல்லும் பொழுது, பார்க்க கேவலமாக இருக்கிறாய் என்று அனைவரும் நக்கல் செய்தாலும், கூலாக நான் கேவலமாக இருப்பது பழசு..ஆனால் புதுசு என்ன தெரியுமா..? கேவலமாக இருக்கும் நான் இங்கு நிற்பது தான் என கூறி, நக்கல் செய்தவரையே வெட்கி தலை குனியும் அளவிற்கு செயலில் காமித்தவர் அந்த வரிசையில் என்றும் இடம் பிடித்திருப்பவர் தான் அட்லீ.

எந்த படமாக இருந்தாலும் சங்கரை போல பிரமாண்டமாக காண்பித்து அதனை தன் பாணியில் எடுத்து ஹிட் கொடுப்பவர் என்ற தான் அட்லீ, இவர் இயக்கிய எந்த படமும் இதுவரை தோல்வி அடைந்தது இல்லை. பார்க்க கருப்பாக ஒல்லியாக இருக்கிறானே இவன் என்ன செய்வான் என்று சொன்னவர்களுக்கு 'சொல்வதை விட செயல்" முக்கியம் என்ற வார்த்தைக்கு இணங்க தனது படைப்பில் பதிலடி கொடுத்தவர் அட்லீ, இவர் என்ன செய்தாலும் அட்லீக்கு விமர்சனம் தான்.
இதையும் படிங்க: அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்கா தான்.. விஷயம் அறிந்து சண்டைக்கு போன நயன்.. உண்மையை உடைத்த செய்யாறு பாலு!
தற்போது இவர் இயக்கிய பேபி ஜான் திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில், அப்படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஒருவர், அட்லீயை பார்த்து நீங்கள் ஹீரோக்களை பார்க்க செல்லும்போது உங்களை எங்கு தேடுவார்கள் என நக்கலாக கேட்டதற்கு, கூலாக என்னுடைய முதல் படைப்பை ஏ.ஆர் முருகதாஸிடம் கொடுக்க சென்ற போது அவர் என் உருவத்தை பார்க்கவில்லை என்னுடைய ஸ்கிரிப்டை தான் பார்த்தார் என கூறி நெத்தியடி பதிலை கொடுத்தார்.

இப்படி இருக்க, இயக்குநர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் ரஜினியின் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்து ஷங்கரின் முழுவித்தையையும் கற்று கொண்ட அட்லீ தயாரித்த, ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், போன்ற படங்கள் அனைத்தும் ஹிட் படம் தான். இதனை தொடர்ந்து, இவர் இயக்கிய 'ஜவான்' திரைப்படம் ஓடாது என்று விமர்சனம் செய்தவர்கள் வாய்பிளக்கும் அளவிற்கு ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் திக்குமுக்காட வைத்தது.

இந்த நிலையில், தற்போது, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மிகவும் பிரமாண்டமாக அட்லீ இயக்க இருக்கும் திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கிறார். இந்த சூழலில், சமீபகாலமாக இப்படத்தை குறித்து அட்லீ சிவகார்த்திகேயனிடம் பேசி வருவதாக தகவல்கள் வெளியானது. இதனை உறுதி படுத்தும் வகையில், இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் மற்றொரு நடிகருக்கான முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் ஹீரோயினாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாத்ரூம் கழுவி நடிகையை நடிக்க வைத்த இயக்குநர்.. எத்தனை பேருக்கு தெரியும் இந்த சம்பவம்...!