கவுண்டமணி, வடிவேலு வரிசையில் தனித்துவமான நகைச்சுவைக்கு சொந்தக்காரர் சந்தானம். தனியாக நடித்தாலும், கதாநாயகர்களோடு இணைந்து நடித்தாலும் இவரது காமெடிக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. ஆனால் நகைச்சுவை நடிப்புக்கு மூட்டைக்கட்டி விட்டு இனி முழுநேர கதாநாயகன் தான் என்றான பின்னர் சந்தானத்தின் மார்க்கெட் சீசா ஊசல் போல ஆடிக்கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் அவர் நடித்த DD Returns என்ற காமெடிப் படம் ஓரளவு வெகுஜன வரவேற்பை பெற்றது. தில்லுக்கு துட்டு என்ற படத்தின் இரண்டாம் பாகமாக DD Returns வந்தாலும், தனியொரு படமாகவே மக்கள் அதனை ரசித்தனர். அந்த படத்தை எழுதி, இயக்கிய அதே எஸ்.பிரேம் ஆனந்த் தான் இப்போது DD Next Level படத்தையும் இயக்குகிறார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளும் ரவி மோகன்... கை வசம் இருக்கும் நிறைய படங்கள்..!

ஆனால் இந்த படத்தை தயாரிப்பது நடிகர் ஆர்யா என்பது தான் ஸ்பெஷல்.. அதாவது Niharika Entertainment என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஆனாலும், தனது The Show People என்ற நிறுவனம் மூலம் ஆர்யா இப்படத்தை வெளியிடுகிறார். இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக கீத்திகா நடிக்கிறார். மேலும் செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், மாறன் போன்றவர்கள் நடிக்கின்றனர். Ofro இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இதன் முதல் பாடல் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், அதன் முன்னோட்ட வீடியோவை யூ டியூபில் வெளியிட்டுள்ளார் சந்தானம். அதில் ஆர்யா பாடல் எழுத முயல்வது போலவும், சந்தானம் திருப்பதி கோயிலுக்கு சென்று வேண்டிக்கொண்டு பேசுவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சீனிவாசா கோவிந்தா என்று தொடங்கும் அந்த பாடல் நாளை வெளியிடப்பட உள்ளது.
இதையும் படிங்க: ராமருக்கு வில்லனாகும் யாஷ்..! கேஜிஎப் முதல் இராமாயணம் வரை.. சும்மா அதிருதுல்ல..!