தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், "தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வர உள்ளன. ஜெயலலிதாவின் தொண்டர்கள் நம் பக்கம்தான் உள்ளனர். கொள்ளையடித்தவர்கள் மட்டும்தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமியிடம் உள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தை வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இரட்டை இலைக்காக விழும் வாக்குகள் தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள். அந்த வாக்குகளை தனக்கு சாதகமாக்கி தி.மு.க.,வுக்கு துணை போகிறார். தமிழகத்தில் மு.க.ப்ஸ்டாலின் ஆட்சியில் இருக்கும் வரை தன்னை கைது செய்ய மாட்டார்கள் என்கிற நோக்கத்துடன் எடப்பாடி பழனிசாமி கட்சி நடத்துகிறார். தாங்கள் கொள்ளையடித்து வைத்துள்ள மக்கள் வரிப்பணத்தை பாதுகாக்கவும், வழக்குகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் அவர்கள் கட்சி நடத்துகின்றனர். லாட்டரி சீட்டில் யோகம் அடிக்கும் அல்லவா? அது போல் கிடைத்த முதல்வர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி.

இதையும் படிங்க: அதிமுகவில் கேள்விக்குறியாகும் எடப்பாடி தலைமை?... கொங்கு மண்டலத்தையே திரும்பி பார்க்க வைத்த அண்ணாமலை...!
வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் அ.தி.மு.கவுக்கு மூடு விழா நடத்தி விடுவார்கள். நாம் தான் அ.தி.மு.கவை மீட்டெடுக்க வேண்டும். துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாதவர் எடப்பாடி பழனிசாமி. அவர் துரோகிகள் குறித்த பட்டியலை வெளியிடுவது நகைச்சுவையாக உள்ளது. ஜெயலலிதா தொண்டர்கள் ஓர் அணியில் இணைந்தால்தான் தி.மு.கவை வீழ்த்த முடியும். ஆனால், பதவி வெறி பிடித்தவர்கள் இதை தடுத்து வருகிறார்கள். உறுதியாக வரும் தேர்தலில் இவற்றையெல்லாம் முறியடித்து விடுவோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. எங்கும் போதை கலாசாரம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் 2026இல் மீண்டும் அமையும்" என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடப்பாவமே... அதிமுகவிற்கு இப்படியொரு நிலையா?... கூட்டத்திற்கு ஆள் சேர்க்கப்பதற்காக அதிரடி அறிவிப்பு...!