நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் பெங்களூரை சேர்ந்த கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், சமீபத்தில் இந்த நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடைபெற்று உள்ளது. மேலும் இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் ஜனநாயகன் ஷூட்டிங்கில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சரியான சம்பளம் மற்றும் பேட்டாக்கள் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஷூட்டிங்கை அந்நிறுவனம் நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தன.

இப்படி தயாரிப்பாளர் நிறுவனத்தின் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதால், படத்தின் மீதமுள்ள ஷூட்டிங்கை எப்படியாவது முடிக்க வேண்டும் என நினைத்த அந்நிறுவனம் பணத்திற்காகவும் படக்குழுவினருக்கு சம்பளம் கொடுப்பதற்காகவும் ஜனநாயகம் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்கு ரூ.80 கோடிக்கு விற்று அந்த பணத்தை வைத்து மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்து உள்ளனர்.
இதையும் படிங்க: திரைபிரபலங்களை பீதியடைய செய்த தொழிலதிபர்..! ஒரே புகார்.. 25 பேர் மீது வழக்கு..! விஜய்தேவர்கொண்டா, பிரகாஷ்ராஜ் காட்டம்..!

இப்படி இருக்க, ஜனநாயகன் திரைப்படத்தின் அப்டேட்டுகள் அடிக்கடி வெளியாகி வந்த நிலையில், நடிகர் விஜயுடன் சக நடிகர்கள் மட்டுமல்லாமல் இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லி ஆகிய மூன்று பேரும் இணைந்து இப்படத்தில் வரும் குறிப்பிட்ட பாடலில் "நடிகர் விஜய்க்கு சென்ட் ஆஃப் கொடுக்கும் காட்சிகளில்" நடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, விஜயின் "ஜனநாயகன்" படமும் சிவகார்த்திகேயனின் "பராசக்தி" படமும் பொங்கலுக்கு வெளியாகி, வசூலில் மோத காத்திருக்க, இவர்களுக்கு நடுவில் புதியதாக, கேஜிஎப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் படமும் களமிறங்கியுள்ளது. அதன்படி, மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடுவோம் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த சூழலில், ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் எப்பொழுது வெளியாகும் என்ற தகவல் கசிந்துள்ளது. அதன்படி, ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வருகிற "ஜூன் 22ம் தேதி" தளபதி விஜயின் பிறந்த நாளான அன்று வெளிவரும் என படக்குழுவினரால் கூறப்பட்டு இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தில் அரசியல் கட்சிகளில் ஜெயிக்க வாக்குகள் எவ்வளவு முக்கியம் என்றும் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் பேசும் படமாக ஜனநாயகன் படம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதான் படத்தின் கதைக்களமாக இருக்கும் என்றும் அதுமட்டுமல்லாமல் விஜய் அரசியலில் களமிறங்கி இருப்பதால் புரட்சிரமான வசனங்களை இப்படத்தில் எழுதி இருக்கிறார் இயக்குநர் ஹெச். வினோத். பல பன்ச் வசனங்கள் அனைத்தும் தீயாய் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க: அந்தரங்க வீடியோ லிங்க் வேணுமா.. உன் வீட்டு பெண் வீடியோவ பாரு.. கொதித்துப்போன ஸ்ருதி..!