கமல்ஹாசன் நடித்த 'புன்னகை மன்னன்' படத்தில் அறிமுகமானவர், ஷிகான் ஹூசைனி. பிறகு ரஜினியின் ' வேலைக்காரன்', விஜய் நடித்த 'பத்ரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஷிஹான் ஹூசைனி. கடையாக 2022இல் வெளியான ,'காத்துவாக்குல 2 காதல்' படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு வரவேற்பை பெற்றது.

ரத்த புற்று நோய் பாதிக்கப்பட்ட அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் வாழ, ஒரு நாளைக்கு 20 லிட்டர் ரத்தம் தேவைப்படுவதாக அவர் வெளியிட்ட வீடியோவில் உருக்கமாகப் பேசியிருந்தார்.
சில நாட்கள் மட்டுமே உயிருடன் இருப்பேன் என்று கூறியிருந்த ஷிகான் ஹூசைனி, தனது உடலை தானம் செய்வதாகவும் அறிவித்தார். இந்நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த ஹூசைனியின் உடல் நிலை மோசமடைந்த நிலையில், இன்று காலை காலமானார். அவருடைய மறைவுக்கு பலரும் சோஷியல் மீடியாவில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் 400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாகவும் இருந்தவர் ஷூசைனி. ஏற்கனவே அவர் வெளியிட்ட வீடியோவில், "என்னுடைய ஒரே ஒரு கனவு என்னவென்றால் தமிழ்நாட்டை சேர்ந்த என்னுடைய மாணவர் அல்லது மாணவி ஒலிம்பிக் மெடல் வாங்க வேண்டும். அதற்காக நான் கட்டி வைத்த கலை மாளிகையை உடனடியாக விற்று அந்தப் பணத்தை எல்லாவற்றையும் எட்டு ஆண்டுகளுக்கு மேல் பயிற்சி பெற்று வரும் என்னுடைய மாணவிகள் ஒலிம்பிக் மெடல் வாங்க பயன்படுத்த வேண்டும் என்பதுதான்.
இதையும் படிங்க: அன்று போக்கிரி பொங்கல்; இன்று ஜனநாயகன் பொங்கல்... வெளியானது புதிய அப்டேட்!!

அதுபோல பவன் கல்யாண் மற்றும் விஜய் எல்லாரும் என்னுடைய மாணவர்கள்தான். விஜய்யும் என்னிடம் 'பத்ரி' படத்திற்காக கராத்தே கற்றுக்கொண்டார். அந்த படத்தில் விஜயின் கை மேல் கார் ஏறியது எல்லாம் உண்மைதான். அவருக்கு நான் ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன், அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வத்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும்" என்று ஹூசைனி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஜினிக்கே அல்வா..! உங்களுக்கு பிரைம்னா.. எங்களுக்கு..? விற்பனையானது ஜனநாயகன் படம்..!