போலீசார் சில நிப்பந்தங்களின் பெயரில் போடப்படும் பொய் வழக்கு ஒருவருடைய வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டு விடும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.
சமூகத்தில் பிரபலமானவர்கள் பாதிக்கப்பட்ட வழக்கு என்றால், நாட்டின் கவனம் முழுவதும் அந்த வழக்கில் இருப்பது தவிர்க்க முடியாதது. இந்த வழக்கில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேல் அதிகாரிகள் கொடுக்கும் நிர்பந்தம் காரணமாக விசாரணை அதிகாரிகள் யாராவது ஒருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விடுகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்து தான் வருகின்றன.
இது பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் வாழ்க்கையில் என்ன என்ன பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பது இந்த வழக்கிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். பிரபல பாலிவுட் நடிகர் சயீப் கான் கத்தியால் குத்தப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இதையும் படிங்க: சைஃப் அலி கான் மீது தாக்குதல்: 100 சதவீதம் பொருந்தாத குற்றம் சாட்டப்பட்ட ஷரிஃபுலின் கை ரேகைகள்..! உண்மை குற்றவாளி யார்..?

உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்வதற்கு சில நாட்கள் பிடித்தன. ஆனால் அதற்கு முன்பாக அவசர கோலத்தில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அவர் பெயர், ஆகாஷ் குனோஜியா. மும்பையில் சுற்றுலா நிறுவனம் ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வந்த ஆகாஷ், உடல் நல குறைவாக இருந்த தனது பாட்டியை பார்ப்பதற்காகவும், தான் திருமணம் செய்துள்ள விரும்பிய ஒரு பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து பேசுவதற்காகவும் பிலாஸ்பூருக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் ரயில் நிலையத்திலேயே அவரை தடுத்து நிறுத்தி, சயீப்கான் கத்திக் குத்து வழக்கில் கைது செய்து விட்டனர்.
இந்த தாக்குதலுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று போலீசாரிடம் அவர் மன்றாடிய போதும், ஆகாஷின் புகைப்படங்கள் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பரவலாக விளம்பரம் செய்யப்பட்டிருந்ததால், 'தாக்கியவர் அவர் தான்' என்ற முத்திரை ஆகாஷ் மீது குத்தப்பட்டு விட்டது. போலீசார் அவரை கைது செய்து படம் பிடித்து மீண்டும் ஊடகங்களில் செய்தியாக வெளியிட்டு விட்டனர்.
புலன் விசாரணையில், உண்மையான குற்றவாளி தற்போது கைதாகி சிறையில் இருக்கும் முகமது ஷெரீப் இஸ்லாம் என்பவரை அடையாளம் கண்ட பிறகு தான், ஆகாஷை போலீசார் விடுதலை செய்தனர். இதனால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பாருங்கள்.. முதலில் அவருடைய சுற்றுலா நிறுவன உரிமையாளர் உடனடியாக அவரை வேலையில் இருந்து தூக்கி விட்டார். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த பத்திரிகை மற்றும் ஊடக செய்திகளின் அடிப்படையில் அதை நம்ப மறுத்த அவர் "நீ மீண்டும் வேலைக்கு வர வேண்டாம்" என்று ஆகாசிடம் சொல்லிவிட்டார்.\
சரி வேலை போச்சு.. அதோடு விடவில்லை, அவருடைய கிரகம். ஆகாசுக்கு தங்கள் பெண்ணை மணமுடித்து கொடுப்பதில் விருப்பமாக இருந்த பெண் வீட்டாரும் இந்த 'கதை'யை கேட்ட பிறகு அவரை நிராகரித்து விட்டனர். இது பற்றி குறிப்பிட்ட ஆகாஷ் "எனது வாழ்க்கையில் எல்லாம் சரியாகி "செட்டில்" ஆகலாம் என்று நினைத்திருந்த நேரத்தில், இந்த கைது சம்பவம் எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது" என்று புலம்பியதை கேட்க நெகிழ்ச்சியாக இருந்தது.
இந்த வழக்கில் தன்னுடையஒரு முக்கியமான உடல் அடையாளத்தை கூட போலீசார் காண தவறியது தான் ஆகாசுக்கு உள்ள பெரிய வருத்தம். அதாவது நடிகரை தாக்கியவர் பற்றி வெளியான படத்தில் அந்த குற்றவாளிக்கு மீசை இருந்தது. ஆனால் ஆகாசுக்கு மீசை இல்லை. இதை அவர் எடுத்துச் சொல்லியும் போலீசாருக்கு என்ன நிர்பந்தமோ தெரியவில்லை.. பொய் வழக்கில் சிக்க வைத்து விட்டனர்.
"இனியாவது தன்னை நிம்மதியாக வாழ விடுங்கள்" என கதறும் அவர், இந்த வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி வெளியிடப்பட்டஅனைத்து படங்களையும் இணையத்தில் இருந்து நீக்கும்படி போலீசாருக்கு கருணையுடன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
நடிகர் கத்தியால் குத்தப்பட்டது ஜனவரி 16ஆம் தேதி அன்று இரவு. ஆனால் அதற்கு ஏழு நாட்களுக்குப் பிறகுதான் போலீசாரிடம் இந்த சம்பவம் குறித்து அவர் வாக்குமூலம் கொடுத்திருந்தது நினைவு இருக்கலாம்.
இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநருக்கு சைஃப் அலி கான் எவ்வளவு பணம் கொடுத்தார் தெரியுமா..? குவியும் பரிசுகள்..!