தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள கட்சி சீமானின் நாம் தமிழர் கட்சி. இதற்கு முன்பாக நடிகர் கேப்டன். விஜயகாந்தின், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தான் தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய வாக்கு வங்கி அரசியல் கட்சியாக இருந்தது.
மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல 50% வாக்கில் இருந்து தற்போது கூட்டணி பலத்தோடு மட்டுமே ஒற்றை இலக்கு அல்லது இரட்டை இலக்கை தொடக்கூடிய நிலையில் உள்ளது.

யாருடன் கூட்டணி இல்லாமல் தனிப்பட்ட கட்சி என்றால் அது திமுக, அதிமுகவை கடந்து நாம் தமிழர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் மட்டுமே. தங்களுக்கென ஒரு வலுவான வாக்கு வங்கியை தமிழகத்தில் வைத்துள்ளது என்று சொல்லலாம்.
இதையும் படிங்க: கயல்விழிக்கு ரூட் கிளியர்… நாதக-வில் காளியம்மாள் விலகல்..? திமுக- அதிமுகவுக்கு தம்பிகள் எச்சரிக்கை..!
தற்போது புதிதாக அரசியல் களத்திற்கு வந்துள்ள நடிகர் விஜயின் வாக்கு வங்கி பலம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பது தனிக்கதை.

கடந்த தேர்தலின் அடிப்படையில் மூன்றாவது மிகப்பெரிய கட்சியான நாம் தமிழர் கட்சியின் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் கட்சி தொடங்கிய ஆரம்ப காலங்களில் இருந்து தொடர்ந்து அவரிடம் பயணித்த முக்கிய பிரபலங்கள் அல்லது நிர்வாகிகள் தொடர்ந்து இன்று வரை விலகிக் கொண்டே இருப்பது தான். எவ்வளவு பேர் விலகினாலும் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கான வாக்கு சதவீதம் உயர்ந்து கொண்டே செல்கிறதே தவிர குறையவில்லை என்பதே கள நிலவரம் முடிவுகள் காட்டுகிறது.
தோராயமாக எடுத்துக் கொண்டால் சீமான் கட்சியில் முக்கிய தளகர்தர்களாக அவரோடு இருந்த ராஜீவ் காந்தி தற்போது திமுகவில் முக்கிய பொறுப்பிலும் கல்யாணசுந்தரம் தற்போது அதிமுகவில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார்கள்.
இதுபோன்று ஏராளமான நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் என சீமான் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலர் பல கட்சிகளிலும் இணைந்து தற்போது செயலாற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் சீமான் கட்சியின் பிரபலமான பெண் முகமான நாகை மாவட்டத்தைச் சேர்ந்த காளியம்மாள், என்பவரும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்தெல்லாம் செய்தியாளர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பும் போது அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இது ஒரு இலையுதிர் காலம் அதேபோன்று நாம் தமிழர் கட்சிக்கும் இலையுதிர் காலம் தான் என கேஷுவலாக பதில் அளித்து சென்று விட்டார்.

தேர்தல் கள நிலவரங்களை வைத்து பார்க்கும் போது எத்தனை முக்கியமான நிர்வாகிகள் சீமானை விட்டு சென்றாலும் கடந்த நான்கு, ஐந்து தேர்தல்களில் அவரது வாக்கு சதவீதம் இதனால் குறையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
இதையும் படிங்க: பெரிய கட்சிகள் கூப்பிட்டே போகாதவன்.. விஜய்யிடம் கூட்டணி வைப்பேனா.? தவெக கூட்டணிக்கு நோ சொன்ன சீமான்