தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலுவாக முன்னெடுத்துள்ளனர். உம்மைக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கப்படும் என்றால் அப்படிப்பட்ட நிதியே தேவையில்லை என்ற அளவுக்கு பேசப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு உரித்தான கல்வி நிதியை தராமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில் பாராளுமன்றத்திலும் தொடர்பான பிரச்சனைகள் எழுப்பப்பட்டன.
பல்வேறு போராட்டங்கள் விமர்சனங்கள் கண்டனங்கள் இவற்றையெல்லாம் தாண்டி கூட மத்திய அரசு மும்மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது. ஆனால் ஒருபோதும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்பதில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் போக்கை கண்டித்து திமுக சார்பில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் பா.ஜ.க, மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தி.மு.க., கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் மும்மொழி விவகாரத்தில் முதலமைச்சரின் ஸ்டாலினை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: ட்விட்டரில் கருத்து மோதல்.. யோகிக்கு மு.க.ஸ்டாலின் பதில்.. விமர்சித்த அண்ணாமலை..!

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத், இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை மட்டும் பாதிக்கும் வகையில் சுயநலம் சார்ந்த அரசியல நலங்களுக்காக முன்மொழி பற்றிய சர்ச்சை உருவாக்கப்பட்டு வருவதாகவும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளும் கற்பிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்

இந்த மொழிக் கொள்கை அதிகபட்சமான வேலை வாய்ப்புகளை உருவாக்க வழி வகுத்துள்ளது என்றும் உத்தர பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, போன்ற மொழிகளை கற்பிப்பதாகவும் அதனால் உத்தரப்பிரதேசம் சிறியதாகி விட்டதா என்ன என்று கேள்வி எழுப்பினார். இங்கு தான் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்றும் விளக்கினார்.

தங்களின் குறுகிய அரசியல் நலன்களுக்காக இதுபோன்ற மொழி சர்ச்சையை உருவாக்குபவர்கள் அரசியல் நோக்குகள் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் ஆனால் அவர்கள் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை தடுப்பதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: வெறுப்பு பற்றி நமக்கு பாடம் எடுக்கிறார் யோகி ஆதித்யநாத்.. இது அவல நகைச்சுவை.. மு.க.ஸ்டாலின் மரண கலாய்.!!