நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,290க்கும், சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.74,320க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை நிலவரம் (23/04/2024):
இன்றைய நிலவரப்படி, (புதன் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 275 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 015 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,200 ரூபாய் குறைந்து 72 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: விண்ணை முட்டும் தங்கம் விலை; இன்று ஒரே நாளில் சவரனுக்கு மட்டும் இவ்வளவு உயர்வா?
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 300 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 834 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,400 ரூபாய் குறைந்து 78 ஆயிரத்து 672 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடித்து வருகிறது. ஒரு கிராம் விலை 111 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது
சரிவுக்கான காரணம் என்ன?
அமெரிக்க டாலரின் மதிப்பு மீண்டும் உயர்ந்ததாலும், அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்றத்தாலும் தங்கத்தின் விலைகள் வரலாறு காணாத உச்சத்திலிருந்து பின்வாங்கியுள்ளது.
இதையும் படிங்க: ஆஹா.. சவரனுக்கு இவ்வளவு குறைவா..? தொடர்ந்து சரசரவென சரியும் தங்கம் விலை..!