பொதுவாகவே அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்ற நுண் பொருள் இருப்பது சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த ப்ரோமெலைன் அமிலம் கர்பப்பையை சுரங்க வைக்கும் தன்மை கொண்டதால் அது கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளரும் சிசுவை கலைத்துவிடும் என்ற தகவல் உள்ளது. ஆனால், இதிலுள்ள போலிக் ஆசிட் சிசுவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம்.1கப் அன்னாசி பழத்தில் 30 மைக்ரோ கிராம் அளவு போலிக் ஆசிட் உள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் குறைவான அளவில் அன்னாசிப்பழத்தை எடுத்துக் கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதிலுள்ள ப்ரோமெலைன் மற்றும் நார் சத்து பசி எடுக்கும் தன்மையை குறைத்து ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. மேலும், மலச்சிக்கல் ஏற்படாமல் தடுத்து உடல் எடையை எளிதாக குறைக்கிறது. இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி இன்ஃபிளோமெட்டரி குணங்கள் உடலில் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடுவது மட்டுமின்றி திடிரென ஏற்பட்ட வீக்கம், காயங்கள் மற்றும் புண்கள் ஆகியவற்றை விரைவில் ஆறுவதற்கு துணையாக உள்ளது. அன்னாசிப்பழத்திலுள்ள சத்துக்கள் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. எலும்புகள் வலுவடைய அன்னாசி பழம் மிகவும் சிறந்தது.
இதையும் படிங்க: ஆவாரம் பூவில் இத்தனை நன்மைகளா? - எப்படி பயன்படுத்தலாம்

175 gm அன்னாசி பழத்தில் நம் எலும்புக்கு தேவையான 60 gm மங்கனீஸ் சத்துக்கள் கிடைக்கிறது. இது நம் உடலில் ஒரு நாள் மாங்கனீஸ் தேவையை பூர்த்தி செய்கிறது. இதனுடன் சிறிதளவு கால்சியும் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களும் அடங்கியுள்ளன. எனவே எலும்புகள் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்த்திற்கும் பெரிதும் பயன்படுகிறது. இரும்பு சத்து புரதமும் இதில் அடங்கியுள்ளதால் ரத்தசோகை உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு பயன் பெறலாம். இதிலுள்ள 88 சதவீத நீர் சத்து உடலுக்கு நல்ல நீரேற்றம் கிடைக்கச் செய்து புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது.

கல்லீரல் நோய், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இதை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. மேலும், இதய ஆரோக்கியத்திற்கும், இதய சம்மந்தமான அனைத்து நோய்களுக்கும் அன்னாசி பழம் மிகவும் நல்லது. அன்னாசிப்பழம் இத்தனை நன்மைகளை கொண்டிருப்பதற்கு ப்ரோமெலைன் சத்துக்கள் தான் காரணம். இது அன்னாசி பழத்தில் தண்டுபோன்ற பகுதியில் தான் நிறைந்துள்ளது. எனவே அதனை அப்புறப்படுத்தாமல் சேர்த்த்து சாப்பிட வேண்டும். சில நபர்களுக்கு அன்னாசி பழம் சாப்பிட்டால் உடலில் அரிப்பு, அழற்சியை ஏற்படுத்தும், அவர்கள் இந்த பழத்தை தவிர்ப்பது நல்லது.
இதையும் படிங்க: நீண்ட நாள் வாழ வேண்டுமா ? உங்க இதயம் என்ன சொல்லுது...