இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மாரடைப்பால் இளம் வயதினர் தீடீரென இறக்கும் நிகழ்வுகள் நம்மை அச்சத்தில் ஆழ்த்துகின்றன. மாறிவரும் உணவு பழக்க வழக்கமும் வாழ்க்கை முறையும் தான் இதற்கு காரணம் என்று மருத்துவத்துறை கூறும் அதே வேளையில், இதுகுறித்து பல்வேறு ஆய்வு கட்டுரைகளையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.
‘தி லான்செட்’ மற்றும் அதனுடன் தொடர்புடைய பத்திரிகைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இதயத் துடிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவது 50% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: உடல் எடை குறைக்க போறிங்களா ? ஆளிவிதை அதுக்கு பயன் தரும்
ஒருவருக்கு மாரைடப்பு வரும் முன் தெரியும் அறிகுறிகளை கட்டாயம் அறிந்து கொண்டால் உயிரிழப்பை தவிர்க்கலாம். மார்பின் மையத்தில் இறுக்கமான வலி அல்லது அழுத்துவது போன்ற உணர்வு சில நிமிடங்களுக்கும் மேலாக நீடிப்பது, இடது தோள் பட்டையிலிருந்து முதுகு, கழுத்து வழியாக இடது கை மற்றும் தாடைகள் வழியாக வரை வலி பரவி அசௌகரியத்தை ஏற்படுத்துவது, நெஞ்செரிச்சல் நீடித்து இருப்பது, மூச்சு வீட சிரமப்படுவது, மயக்கம், பதற்ற உணர்வு, உடல் வியர்த்து குமட்டல் வாந்தி வருவது போன்ற உணர்வுகள் மாரடைப்புக்கான அறிகுறிகளாக உள்ளன.
மாரடைப்புக்கு மிக முக்கியமான காரணம் இரத்தம் நாளங்களில் கொழுப்பு படிந்து அடைப்பு ஏற்படுவது. இதயத்துக்கு இரத்த ஓட்டத்தைக் குறைத்து சேதத்தை ஏற்படுத்துகிறது சில நேரங்களில் இதயம் செயலழிக்கிறது. இது உடல் பருமன், புகைபிடித்தல், மரபு வழியாகவும், வயது முதிர்வு, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகும், தொடர்ச்சியான மனஅழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இதய நோய் வர வாய்புண்டு. சிலருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் SILENT அட்டாக் வரலாம்.

முதலில் புகைபிடிப்பதை மது அருந்துவதை முற்றிலும் தவிர்ப்பது, உடல் எடையை பராமரிப்பது மிகவும், தினமும் உடற்பயிற்சி அல்லது வாரத்திற்கு 150 நிமிடங்கலாவது மிதமான உடற்பயிற்சி செய்வது இதயத்திற்கு பெருமளவு அபாயத்தை குறைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரத்த அழுத்தம், சக்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளவது மிகவும் அவசியம் அதற்கு தேவைப்பட்டால் மருந்துகள் மூலம் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். தூக்கமின்மை, மன அழுத்தம் இல்லாமல் இருக்க யோகா போன்ற பயிற்சிகளை செய்து ஆரோக்கியமான மனநிலையை வைத்துக்கொள்ளுதல், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து காய்கறிகள் பழங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
நாம் குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு முறை மாஸ்டர் ஹெல்த் செக் அப், இசிஜி மற்றும் எக்கோ பரிசோதனை செய்து இதயத்தின் ஆரோக்கியத்தை கண்டறிந்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
வீட்டில் 325 mg aspirin மாத்திரை , சப்ளிங்குவல் நைட்ரோகிளிசரின் மாத்திரைகள் வைத்துக்கொள்ளுதல் மூலம் அவசர (எமெர்கெனசி) காலங்களில் உயிரை காப்பாற்ற துணையாக அமையும்.
இதையும் படிங்க: பொடுகு தொல்லையா? இதை பண்ணுங்க...