இன்றைய அவசர உலகத்தில் நம் மனம் மட்டுமல்ல உடலும் நல்ல சுறுசுறுப்பாக இயங்குவது இன்றியமையாததாக உள்ளது. அடிக்கடி சோர்வு ஏற்பட்டால் அது உடல் இயக்கத்தின் குறைபாட்டை உணர்த்துகிறது என்பதை நாம் புரிந்து கொண்டு உடனே அதற்கு தீர்வை தேட வேண்டும். பெரும்பாலும் அது வைட்டமின் b12 குறைப்பாட்டாகத் தான் இருக்கும். நம் இரத்தத்தில் சிவப்பு நிற செல்கள் உருவாக காரணமாக இருப்பது, நரம்பு மண்டலத்தை பாதுகாப்பது, டி என் ஏ உற்பத்தி செய்வது, உடலுக்கு நல்ல ஆற்றலைத் தருவது உள்ளிட்ட செயல்களுக்கு வைட்டமின் b12 மிகவும் அவசியமாகிறது.
மேலும், மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு கண் பார்வை கோளாறு, நினைவாற்றல் இழந்து போவது, கை மற்றும் கால் பாதங்களில் குத்துவது போன்ற உணர்வு, தசையினைக்கமின்மை பாதிப்புகள் ஏற்படும். மேலும், கருவுறுதலில் சில சவால்களையும், மலட்டுத்தன்மை போன்றவற்றையும் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நாளைக்கு 2.4 மைக்ரோ கிராம் வைட்டமின் b12 எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: பிரபலமாகும் கேரட் ஆயில், உண்மையில் பயன் தருமா ?

நம் உடல் மற்றும் மூளை இயக்கத்திற்கு தேவைப்படும் வைட்டமின் b12 பெரும்பாலும் அசைவ உணவுகளில் தான் உள்ளது. முட்டை, இறைச்சி, மீன்கள், நண்டு ஆகியவற்றில் இது நிறைந்து காணப்படுகிறது.
முட்டையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருந்தாலும் நாம் மஞ்சள் கருவுடன் சேர்த்து உண்ணும் பொது தான் வைட்டமின் b12 முழுமையாக கிடைக்கிறது. ஆகையால், தினமும் ஒரு முட்டையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
கடல் மீன் மற்றும் நண்ணீரில் வாழும் மீன்களில் வைட்டமின் b12 இருந்தாலும் , சில குறிப்பிட்ட வகை மீன்களான சாலமன், டூனா, டிராட் போன்றவற்றில் இது நிறைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது.

நண்டிலும் வைட்டமின் b12 மற்றும் ஒமேகா3 கொழுப்பு சத்துக்கள் அதிக அளவு உள்ளதால் இரத்த உற்பத்தி மற்றும் உடலில் கொழுப்புக்களின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
சைவ உணவுகளில் பால் மற்றும் பால் சம்மந்தப்பட்ட அனைத்து பொருள்களிலும் உள்ளது. சீஸ், பன்னீர், மோர் ஆகியவற்றில் குறிப்பிட்ட அளவு உள்ளது.
இது போன்ற உணவுகளை நாம் எடுத்துக்கொண்டு வைட்டமின் b12 குறைப்பாட்டை சரி செய்வதோடு மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி நலமுடன் வாழலாம்.
இதையும் படிங்க: நீண்ட நாள் வாழ வேண்டுமா ? உங்க இதயம் என்ன சொல்லுது...