சென்னையில் மெட்ரோ தூணில் ஓட்டப் பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் சுவரொட்டி மீது, முதாட்டி ஒருவர் செருப்பு மற்றும் மண்ணை வாரி வீசும் விடியோ காட்சி, வலைதளத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சம் பலம் நடந்தது, விருகம்பாக்கம், பரணி மஹால் அருகே என்பது தெரிய வந்தது. அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்து விட்டு செல்லும்போது, மூதாட்டி இத்தகைய செயலில் செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
சம்பவம் நடந்த இடம், விருகம்பாக்கம் மற்றும் கே.கே.நகர் காவல் நிலையங்களின் எல்லை பகுதி என்பதால், இரு காவல் நிலையங்களிலும், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ.. பிரபாகர ராஜா புகார் அளித்துள்ளார். முதாட்டி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் ஈட்டி பாய்ச்சும் திமுக... கந்தலாகிக் கதறும் கதர் சட்டைகள்... தன்மானத்தை இழந்தால் 2026 அவமானம்..!
சென்னை மாநகராட்சி பகுதியில் சுவரொட்டி ஒட்ட தடை உள்ள நிலையில், அனுமதியின்றி முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் அச்சிடப்பட்ட சுவரொட்டி ஒட்டியிருப்பதற்கு கண்ட னம் எழுந்துள்ளது.
முதல்வர் படம் அச்சிடப்பட்ட சுவரொட்டியை பார்த்து மூதாட்டி வசை பாடியது குறித்து, அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர் ஜெய்குமார், ‘‘ஸ்டாலின் மாடல் அரசு மீது உள்ள கோபத்தின் வெளிப்பாடுதான், மூதாட்டியின் செயல். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தான் பதம்.
"பெஞ்சால்" புயல் வந்தபோது, ஐந்து மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. உணவு, குடிநீர் இன்றி மக்கள் தவித்து வந்தனர். தேங்கிய மழைநீரையும் வெளியேற்றப்படவில்லை. அதனால்தான் அமைச்சச் பொன்முடி மீது மக்கள் சேற்றை வாரி வீசினர். இதுபோன்ற பாவங்களால், 2026 தேர்தலின் போது தி.மு.க.,வினர் தொகுதி பக்கமே செல்ல முடியாத சூழல் நிலவும்’’ என்று தெரிவித்துள்ளார்.
பாட்டியை தேடும் போலீஸ் விவகாரம் குறித்து, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளபதிவில், ‘‘சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் தூணில் ஒட்டப்பட்டிருந்த, முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் படம் இருந்த சுவரொட்டி மீது, வயதான தாயார் ஒருவர், தனது கோபத்தை வெளிக்காட்டும் விதமாக, செருப்பை எறிந்து, மண் வாரித் தூற்றிய காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவியது. 
பெண்கள், குழந்தைகள், வயது முதியவர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத ஒரு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் மீது, பொதுமக்களுக்குக் கட்டுக்கடங்காத கோபம் இருப்பதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது.
நியாயப்படி, முதலமைச்சர் தனது ஆட்சியைச் சுயபரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆனால், அதை விடுத்து, காணொளியைத் தனது சமூக ஊடகத்தில் பதிந்த, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பிரதீஷ் என்பவரைக் கைது செய்திருப்பதோடு, அந்த மூதாட்டியையும் கைது செய்யத் தேடி வருகின்றனர்.
வழக்குத் தொடுத்திருக்கும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில், பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுகவினருக்காக, காவல்நிலையத்தில் பஞ்சாயத்து செய்யப்போன கேவலமான வரலாறு கொண்டவர்.
உங்கள் ஆட்சியில், பாலியல் பலாத்காரம் செய்பவன் எல்லாம் வெளியே சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்க, சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்பவர்கள் பின்னால் திரிய வெட்கமாக இல்லையா? கைது செய்யப்பட்ட இளைஞர் பிரதீஷை உடனடியாக, விடுதலை செய்வதோடு, அந்த வயதான தாயார் மீதான வழக்கையும் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
அந்த மூதாட்டியை தண்டிக்க நினைப்பது அவலத்தின் உச்சம் என பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: எதிர் கட்சிகாரர்களே அந்த பெண்ணிற்கு எதிர்காலம் இருக்கு.. இதில் அரசியல் வேண்டாம்... கனிமொழி எம்பி சாட்டையடி